முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐகோர்ட் தீர்ப்புபடி தனியார் நட்சத்திர ஓட்டல் இடிப்பு

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.6 - சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 3 நட்சத்திர ஓட்டல் கட்டி கோடி கோடியாக சம்பாதித்து விட்டு குறைந்த தரை வரி செலுத்தி வந்த தனியார் ஓட்டல் ஐகோர்ட் தீர்ப்புபடி இடிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை விரைவில் அமைய உள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:-

சென்னை மாநகராட்சி அருகில் உளள விக்டோரியா பப்ளிக்ஹால் மற்றும் அதை சுற்றி உள்ள 56 கிரவுண்ட் நிலம் தனியார் டிரஸ்டுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. அந்த டிரஸ்டிடம் இருந்து உடுப்பியை சேர்ந்த தனியார் ஒருவர் சுமார் 15 கிரவுண்ட் இடத்தை சப்​லீசுக்கு வாங்கி அதில் பிக்னிக் ஓட்டலை கட்டினார். குத்தகை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து விக்டோரியா பப்ளிக்ஹால் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பிக்னிக் ஓட்டல் நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கோர்ட்டிலும் சென்னை மாநகராட்சிக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. ஓட்டலை காலி செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.   இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் அங்கிருந்த பொருட்களை அப்புறப்படுத்தியது. அந்த இடத்தை மெட்ரோ ரெயில் பணிகளுக்காக ஒப்படைத்துள்ளனர். ஓட்டலை இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஓட்டல் தரை தளத்துடன் 3 மாடிகளை கொண்டது. முன்பகுதியில் உணவகம் செயல்பட்டது. முதல் தளத்தில் மினிஹால் இருந்தது. பின்பகுதியில் நட்சத்திர தங்கும் விடுதி செயல்பட்டது. இங்கு 100 அறைகள் இருந்தன. அறை வாடகை தினசரி ரூ.1500 ஆகும். குளிர் சாதன வசதி கொண்ட பார் வசதியும் இருந்தது. சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் இருப்பதால் இந்த விடுதியில் எப்போதும் அறைகள் நிரம்பி வழியும். இந்த இடத்துக்கு தரை வாடகையாக மாதம் 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே கட்டணம் செலுத்தப்பட்டது. கட்டிடத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து சென்று விட்டனர். இருப்பினும் கட்டிட மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இழப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டல் கட்டிடம் முழுவதும் இன்னும் சில தினங்களில் முற்றிலுமாக இடித்து அப்புறப்படுத்தப்படும். அதன் பிறகு மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்