முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் நிலநடுக்கம்: 1.43 லட்சம் பேர் பாதிப்பு

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், நவ. 6 - சீனாவின் தென்மேற்கு பகுதியான ஜின்ஜியாங்கில் மூன்று நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் 1.43 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 63 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் இடிந்ததில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல் தெரியவில்லை. இதில் சுமார் ரூ. 28 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 400 க்கும் மேற்பட்ட நிவாரண குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. பாதிப்படைந்த மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நோய்கள் ஏதேனும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்