முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி மு.பரஞ்சோதி தொடங்கி வைக்கின்றனர்

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

திருச்சி,நவ.- 9 - திருச்சியில் இன்று விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம் தொடக்க விழா நடக்கிறது. தமிழக அமைச்சர்கள் மு.பரஞ்சோதி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் இவற்றை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்கின்றனர். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 30ம் தேதி அரிசி பெற நடைமுறையில் இருந்த தகுதியுடைய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1 கோடியே 85 லட்சம் பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவை வழங்கப்படவுள்ளன. பின்னர் படிப்படியாக தகுதியுடைய அனைவருக்கும் வழங்கப்படும்.  இத்திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். சென்னையில் மாநகராட்சி கமிஷ்னர் கட்டுப்பாட்டிலும் மற்ற மாவட்டங்களில் வருவாய் துறை மூலம் கலெக்டர் பொறுப்பிலும் வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் இன்று விலையில்லா வீட்டு உபயோக பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. தமிழக முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் பகுதியில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் இந்து சமய அறநிலையம், சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் மு.பரஞ்சோதி, செய்தித்துறை மற்றும் திட்ட செயலாக்க துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.  விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், எம்.எல்.ஏ மனோகரன், எம்.பி. குமார், மேயர் ஜெயா, துணை மேயர் மரியம் ஆசிக் மீரா மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். முதல் கட்டமாக 1 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. பிறகு படிப்படியாக அனைவருக்கும் வழங்கப்படும். இதே போன்று திருச்சி கிழக்கு தொகுதி, மேற்கு தொகுதி சார்பில் திருச்சி தேவர் ஹாலில் வழங்கப்படுகிறது. இதே போன்று இலவச ஆடுகள், மாடுகள் வழங்கும் திட்டமும் முதல்வர் ஜெயலலிதா தொகுதியான ஸ்ரீரங்கத்தில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் முத்துசாமி மற்றும் அரசு அலுவலர்கள் செய்துள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்