முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடுகள் பெறும் பயனாளிகள்ஆலோசனை கூட்டம் சகாயம் தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,நவ.- 9 - தமிழக முதலமைச்சரின் விலையில்லா வெள்ளாடு மற்றும் செம்மறி டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 2ம் கட்டமாக ஆடுகள் பயனாளிகளை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சகாயம் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சர் தமிழ்நாட்டு கிராமங்களிலுள்ள ஏழ்மையிலும் ஏழ்மையான மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இந்த உயரிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி தமிழ்நாட்டிலுள்ள 7 லட்சம் நிலமற்ற ஏழை எளிய பெண்களுக்கு 1 பயனாளிகளுக்கு ஒரு கிடா மற்றும் 3 பெட்டையாடுகள் இந்த 5 ஆண்டு காலத்தில் வழங்கப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் இந்தாண்டு 65 கிராம ஊராட்சிகளில் 3223 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு வழங்கப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு கிராமப்பகுதிகளிலும் பயனாளிகளை தேர்வு செய்வதற்காக அந்தந்த கிராமங்களிலுள்ள கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி துணை தலைவர், ஆதிதிராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த வயது முதிர்ந்த வார்டு உறுப்பினர் ஊராட்சி வாரியான கூட்டமைப்பு, சுய உதவிகுழு பிரதிநிதி, சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்த கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். நிலமற்ற விவசாய கூலியாக இருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராமகிருஷ்ணன், மதுரை வருவாய் கோட்டாட்சியர் துரைராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ் உதவி இயக்குனர் ரம்யாதேவி, துணை இயக்குனர் டாக்டர் சின்னதுரை, உதவி இயக்குனர் டாக்டர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago