முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு மே.இ.தீவு 180 ரன்னில் சுருண்டது அஸ்வின் 6 விக்கெட் வீழ்த்தினார்

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

டெல்லி, நவ. - 9  -  மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இன்னும் வெற்றிக்கு 124 ரன் தேவைப்படுகிறது . 4 -வது நாள் ஆட்டத்தின் போது, அறிமுக சுழற் பந்து வீச்சாளரான அஸ்வின்  6 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி மே.இ.தீவு அணியை குறைந்த ஸ்கோரில் அவுட்டாக்க உதவினார். அவருக்கு பக்கபல மாக யாதவ், ஓஜா மற்றும் சர்மா ஆகியோர் பந்து வீசினர். தவிர, இந்தப் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின், மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் டெண்டுல்கர் இருவரும் சாதனை படைத்தனர். அஸ்வின் மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். டெண்டுல்கர் மே.இ.தீவு அணிக்கு எதிராக 15,000 ரன்னைக் கடந்து சாதனை படைத்தார். இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் கடந்த 4 நாட்களாக நடந்த வருகிறது.  இதில் முதலில் இன்னிங்சைத் துவக்கிய மே.இ.தீவு அணி 304 ரன்னை எடுத்தது. பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 209 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதில் டிராவிட் மற்றும் சேவாக் அரை சதம் அடித் தனர்.  3 வது நாள் ஆட்ட நேர முடிவில் மே.இ.தீவு அணி 2- வது இன்னிங்சி ல் 14 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது கே.எட்வர்ட்ஸ் 15 ரன்னுடனும், எப். எட்வர்ட்ஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 4 -வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த மே.இ.தீவு அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 57.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 180 ரன்னி

ல் சுருண்டது. மே.இ.தீவு அணி தரப்பில், ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்

லை. மூத்த வீரரான சந்தர்பால் அதிகபட்சமாக, 58 பந்தில் 47 ரன்னைஎடுத்தார். அடுத்தபடியாக கேப்டன் சம்மி 37 பந்தில் 42 ரன் எடுத்தார். தவிர, கே.எட்வர்ட்ஸ் 33 ரன்னையும், ராம்பால் 18 ரன்னையும் , எடுத்

தனர். இந்திய அணி சார்பில் அறிமுக சுழற் பந்து வீரரான அஸ்வின் வெகு நேர்த்தியாக பந்து வீசினார். அவர் 47 ரன்னைக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். முதல் இன்னிங்சையும் சேர்த்து அவர் மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார். உமேஷ் யாதவ் 36 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, இஷாந்த் சர்மா மற்றும் ஓஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஓஜா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் கைப்பற்றினார். இந்திய அணி 2 -வது இன்னிங்சில் 276 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம்  என்ற இலக்கை மே.இ.தீவு அணி வைத்தது. பின்பு களம் இற

ங்கிய இந்திய அணி 4- வது நாள் ஆட்ட நேர முடிவின் போது, 44 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன் எடுத்து இருந்தது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 124 ரன் தேவைப்படுகிறது. 

சேவாக் 55 பந்தில் 55 ரன்னை எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 5 பவு

ண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். காம்பீர் 32 பந்தில் 22 ரன்னை எடுத்

தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 51 ரன் சேர்த்தனர். 

ராகுல் டிராவிட் 91 பந்தில் 30 ரன்னுடனும், டெண்டுல்கர் 87 பந்தில் 33 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். சச்சின் மே.இ.தீவு அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 15,000 ரன்னைக் கடந்து புதிய சாதனை படைத் ார். அவருக்கு டிராவிட் மற்றும் தோனி உட்பட சக வீரர்கள் வாழ்த்து

தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்