முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயல் இசை நாடகமன்ற,நாட்டிய நிறைவுவிழா டி.ஜெயக்குமார் பங்கேற்பு

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, நவ.- 9 - தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இயல் இசை நாடக நாட்டிய நிறைவு விழா நடைபெறுகிறது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா நல் ஆதரவுடன் தமிழகத்தில் உள்ள திறமையான இயல், இசை, நாடகம், நாட்டியம், கிராமியக் கலைஞர்களை ஒன்றுதிரட்டி 28.10.2011 முதல் 09.11.2011 வரையில் 13 நாட்கள் இயல் இசை நாடக நாட்டிய விழாவினை, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் உள்ள தாகூர் கலையரங்கில் (சத்யா ஸ்டுடியோ அருகில்) நடத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 09.11.2011 (புதன்கிழமை) அன்று நிறைவு விழாவினை நடத்தவுள்ளோம். இந்நிறைவு விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கவுள்ளார். மன்றதலைவர் தேவா வரவேற்புரையாற்ற உள்ளார். உறுப்பினர் - செயலாளர் குமாரி சச்சு சிறப்புரையாற்ற உள்ளார். விழாவில் நாட்டிய நிகழ்ச்சியும், கரகாட்டம் பொய்க்கால் குதிரை போன்ற கலை நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற உள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்