முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்வானியுடன் கருத்து வேறுபாடு: முற்றுப்புள்ளி வைத்தார்மோடி

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

பரூச்(குஜராத்), நவ. - 9 - பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் அத்வானி நடத்தி வரும் ஜனசேத்னா யாத்திரை குஜராத்தை அடைந்துள்ளது. லாபியில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் அத்வானியும் மோடியும் உரையாற்றினர். ஆனால் இருவருக்கும் கருத்து வேற்றுமை உள்ளதாக சில பத்திரிக்கைகள் கூறி வந்தன. நேற்று முன்தினம் இந்த யாத்திரை குஜராத்தின் மிக பழமையான நகரான பரூச்சை அடைந்தது. அங்கு நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசும் போது,  எனக்கும் அத்வானிக்கும் கருத்து வேறுபாடு என்று பத்திரிகைகள் கூறி வருகின்றன. சில பத்திரிக்கை முதலாளிகளின் தந்திரம் இது. இவ்வாறு செய்தி வெளியிடுவதால் காங்கிரஸ் கட்சிக்கு அனுகூலமான நிலையை உருவாக்க திட்டமிடப்படுகிறது. கடந்த ஞாயிறன்று நடந்த கூட்டத்தில் மேடையில் எங்கள் இருவருக்கும் இடையே ஒரு காலியான நாற்காலி இருந்ததாக சில பத்திரிக்கைகள் எழுதியுள்ளன. குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் ஆர்.சி. பால்டுவுக்காக போடப்பட்டிருந்தது அந்த நாற்காலி. அவர் ஒலிபெருக்கியில் பேசிக் கொண்டிருந்த போது அவர் உட்கார்ந்திருந்த இடம் காலியாகத்தானே இருக்கும். நான் பேச எழுந்ததும் என்னுடைய இருக்கையும் காலியாகத்தான் இருக்கும் என்றார் மோடி.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!