முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழையால் உயிரிழந்த 6 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி-ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 10 - தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் உதவி தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக 8.11.2011 அன்று கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், தொளாளர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் சத்தியதேவி, திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் சதாசிவம் என்கிற மணி, சங்கிலிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சண்முகம், ஈரோடு மாவட்டம், துய்யம்பூந்தரை கிராமத்தை சேர்ந்த இருளப்ப நாடார் என்பவரின் மகன் அங்கப்ப நாடார் ஆகியோர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், ஏர்வாடி பகுதி- 2 கிராமத்தை சேர்ந்த பண்டார நாடார் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி மின்சாரம்  தாக்கியதாலும், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், வடமலையனூர் கிராமத்தை சேர்ந்த சன்னியாசி என்பவரின் மனைவி சின்னபிள்ளை மழையினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததாலும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன். பல்வேறு விபத்துகளில் மரணமடைந்த இந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.2 லட்சம் உதவித் தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago