முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் அலுவலகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

நாகர்கோவில், நவ - 10 - முன்னாள் திமுக அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு சொந்தமான இரும்பு கம்பெனி மற்றும் அவரது அலுவலகத்தில் வணிக வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் சுற்றுலாத்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தவர். சுரேஷ் ராஜன். இவர் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது.இவருக்கு நெல்லை மாவட்டம் பழவூரில் என்.எஸ்.ஆர். என்ற பெயரில் இரும்பு கம்பெனி செயல்பட்டுவந்தது. இதை இவரது மனைவி பாரதி நிர்வகித்து வந்தார். இதன் அலுவலகம் நாகர்கோவில் ராமவர்மபுரம் வெள்ளாளர் தெருவில் உள்ளது. இதற்கிடையே இவர் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரையடுத்து கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இவரது வீடுகள், மற்றும் அலுவலகம், மேலும் இவரது உறவினர்கள் வீடுகள் உட்பட பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று 9 ந் தேதி காலை 6 மணிக்கு நெல்லை மண்டல வணிகவரித்துறை இணை ஆணையர் சேகர் தலைமையில் 20 அதிகாரிகள் 5 வாகனங்களில் நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள அவருக்கு சொந்தமான இரும்பு கம்பெனியில் சோதனையில் நடத்தினர். பின்னர் நாகர்கோவில் ராமவர்மபுரம் வெள்ளாளர் தெருவில் உள்ள இரும்பு கம்பெனி அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். இந்த சோதனை காலை முதல் இரவு வரை நடைபெற்றது. வணிக வரித்துறையினர் நடத்திய இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. சோதனையின் போது சுரேஷ் ராஜனின் மனைவி பாரதி உடனிருந்தார். பின்னர் வருமான வரித்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு சுரேஷ் ராஜனின் மனைவி பாரதி பதிலளித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்