முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை சுற்றுச்சூழல்துறையில் முதன்மை மாநிலமாக்குவோம்- பி.வி.ரமணா

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.- 10 - சுற்றுச்சூழல் அமைச்சராக பொறுப்பேற்ற அமைச்சர் பி.வி.ரமணா அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படி தமிழகத்தை சுற்றுச்சூழல் துறையில் முதன்மை மாநிலமாக்குவோம் என்று சூளுரைத்தார்.   முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி சுற்றுசூழல் துறையில் புதிய சாதனை படைப்போம். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவோம் என்று சுற்று சூழல் துறை அமைச்சர் பி.வி.ரமணா கூறினார். சுற்று சூழல் துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்ற அமைச்சர் ரமணா, நேற்று சென்னை கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல் ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.இந்த கூட்டத்தில் மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் சி.வி.சங்கர், உறுப்பினர் செயலர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்தபின் பி.வி.ரமணாவை நிருபர்கள் சந்தித்தனர்.நேற்று சுற்று சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுடன் முதல் ஆய்வுக் கூட்டம் நடத்தினேன். இந்த துறைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நல்ல ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். பல்வேறு புதிய யுக்திகளையும், புதிய முறைகளையும் கையாண்டு ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழ்நாடு இந்த துறையில் புதிய முன்னேற்ற பாதையில் செல்லும். அந்த நம்பிக்கை உள்ளது. சுற்றுசூழல் துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவோம் என்று பி.வி.ரமணா உறுதிபட கூறினார். மாசு கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமணா கூறினார்.

ஜெயலலிதா பதவி ஏற்றதும் குப்பை, கூளங்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னையை குப்பை இல்லா நகரமாக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். திடக்கழிவுகளை அகற்ற ஒழிக்க ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும். பள்ளிகளிலும், மக்களிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், தமிழ்நாட்டில் 16 விதமான பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. அதாவது சிமெண்ட் ஆலை, ரசாயன ஆலைகள் உட்பட பல்வேறு பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் மாசு கட்டுப்பாடு வாரிய விதமுறைகளை கடைப்பிடிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இருந்த போதிலும், கழிவு நீர் வெளியேற்றம், மாசு வெளியேறுதல் உட்பட அனைத்தும் அவ்வப்போது கண்காணிக்கப்படும்.

சாயப்பட்டறை கழிவுகளை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற சுத்திகரிப்பு நிறுவனங்கள் அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா 200 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதன்படி 6 1/2 கோடி ரூபாய் வழங்கப்பட்டு அருள்புரத்தில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றும், பட்டாசுகளில் எந்த அளவுக்கு வெடித்தால் சத்தம் இருக்க வேண்டும் என்று அளவு நிர்ணயித்திருக்கிறோம். பட்டாசு தொழிற்சாலைகளிலும் போய் சோதனை நடத்துவோம். பொங்கல் பண்டிகையின்போது பழைய பொருட்களை, டயர் போன்றவற்றை எரித்து சுற்று சூழல் பாதிக்கும் நிலை உள்ளது. இது குறித்து மக்கள மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுசூழல் துறையில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி புதிய யுக்திகளை கையாண்டு புதிய சாதனை படைப்போம். சுற்று சூழலில் தமிழகம் முதன் மாநிலமாக விளங்குகிறது என்ற நிலையை ஏற்படுத்துவோம் என்றும் அமைச்சர் ரமணா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்