முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுபட்ட இடங்களில் வரும் 27 ல் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ. - 10 - உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத இடங்களில் வரும் 27 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக கடந்த அக்டோபர் மாதம் 17 மற்றும் 19 தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது வேட்பாளர் இறப்பு மற்றும் பிற காரணங்களுக்காக சில பதவியிடங்களுக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கான தேர்தல் வவும் 27 ம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 16 ம் தேதியாகும். மனுக்கள் வரும் 17 ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும். 19 ம் தேதி மனுக்கள் திரும்பப் பெறவும், 27 ம் தேதி வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 29 ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடவடிக்கை முடியும் நாள் 30 ம் தேதியாகும்.  நகர்ப்புற உள்ளாட்சிகளில் திருப்பூர் மாவட்டம்  வெள்ளக்கோவில் ஊராட்சி தலைவர் பதவியிடம், கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் தலைவர் பதவியிடம், மதுரை மாநகராட்சி 18 வது வார்டு உறுப்பினர் பதவியிடம், கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் பேரூராட்சி 7 வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஊரக உள்ளாட்சிகளில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் 1 வது வார்டு உறுப்பினர் பதவியிடம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியம் 18 வது வார்டு உறுப்பினர் பதவியிடம் ஆகியவற்றுக்கு கட்சி அடிப்படையிலான தேர்தல் நடைபெறுகிறது.  திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் நத்தம்பேடுகிராம ஊராட்சி தலைவர் பதவி, காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், ஆற்பாக்கம் கிராம ஊராட்சி 9 வது வார்டு, விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் கிராம ஊராட்சி  3 வது வார்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மானூத்து கிராம ஊராட்சி 1 வது வார்டு, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலன்குளம் கிராம ஊராட்சியின் 1, 5 வது மற்றும் 8 வது வார்டுகள் ஆகியவற்றுக்கான உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago