முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் - சகாயம் தகவல்

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,நவ.- 10 - மதுரை மாவட்டத்தில் வழகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளச்சேதங்கள் குறித்து ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் சகாயம் தலைமையில் நடைபெற்றது.  இதில் வெள்ள சேதத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறுகையில், மதுரை மாவட்டத்திலுள்ள கண்மாய்கள் மற்றும் குளங்களில் நீர் கொள்ளளவு குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறையினர் நேரடியாக ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில்  ஈடுபட வேண்டும். கிராமங்களில் குளங்கள், நிரம்பியது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பொதுப்பணித்துறையினர் அனைத்துக்குளங்களிலும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், நீர் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மதுரை மாவட்டத்தில் இதுவரை மழை வெள்ளத்தால் திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர், குலசேகரன்கோட்டை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் நான்கு பேர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ1 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.  அதேப்போல உசிலம்பட்டியில் இரண்டு மாடுகளுக்கு தலா ரூ.10,000 மும், இரண்டுஆடுகளுக்கு தலா ரூ1000 -ம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மழை வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்பு, ஆடு, மாடுகள் இறப்பு மற்றும் வீடுகள் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உடனடியாக அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகையை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்டவருக்கு வழங்கிட வேண்டும். பழுதான சாலைகள் குறித்து உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப்பொருட்கள் போதுமான அளவு இறுப்பு வைத்துக்கொள்ள வேண்டும். வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சகாயம் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேஷ், மாநகராட்சி செயற்பொறியாளர் அலெக்ஸாண்டர்,முதுன்மைக் கல்வி அலுவலர் ஸ்ரீதேவி, கோட்டாட்சியர்கள் துரைராஜ், புகழேந்தி, மாவட்ட விநியோக அலுவலர் சுரேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தனபாலன், அரசு இராஜாஜி மருத்துவமனை கண்காணிப்பாளர் இராமானுஜம், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ், உதவி இயக்குநர் ரம்யாதேவி, வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்