முக்கிய செய்திகள்

நடிகை சினேகாவுடன் திருமணம் நடிகர் பிரசன்னா அறிவிப்பு

Image Unavailable

 

சென்னை, நவ.- 10 - நடிகை சினேகாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக நடிகர் பிரசன்னா கூறியுள்ளார். சினேகாவும், பிரசன்னாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் இருவரும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்று சொல்லி மறுத்து வந்தார்கள். கடந்த சில நாட்களாக இருவரையும் ஒன்றாக காண முடிந்தது. பொது நிகழ்ச்சிகளுக்கு சேர்ந்து வந்தனர். இருவரும் காதலிப்பது உறுதி என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் பிரசன்னா இன்று அதிகார பூர்வமாக அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சினேகாவுக்கும், எனக்கும் திருமணம் என்பது உண்மை தான். எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்ததம் நடக்கும். வரும் மார்ச் மாதம் திருமணம் நடக்கும் என்பதில் உண்மை இல்லை. திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே அறிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். காதல் பரிசாக சினேகாவுக்கு பிரசன்னா இரண்டு பவுன் மோதிரம் அளித்துள்ளார். அதனை சினேகா விரலில் மாட்டியுள்ளார். சினேகாவும், பிரசன்னாவும் 2009-ல் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. அப்போதுதான் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. சேரனுடன் பிரசன்னா இணைந்து நடித்த 'முரண்' படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

சினேகா முரட்டுக்காளை, விடியல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இரண்டு தெலுங்கு படங்கள் மற்றும் இரண்டு மலையாள படங்களும் கைவசம் உள்ளன. திருமணத்துக்கு முன்பு இப்படங்களில் நடித்து முடித்து விட திட்டமிட்டு உள்ளார். திருமணம் தேதியை இருவரும் ஒன்றாக சேர்ந்து அறிவிக்க உள்ளார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: