முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவு அணியை வீழ்த்தியது

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நவ. - 10  - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு  எதிராக புதுடெல்லியில் நடைபெ ற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் டெண்டுல்கர், சேவாக், டிராவிட் , காம்பீர் மற்று ம் வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். பெளலிங்கின் போது, சுழற் பந்து வீச்சாளர்கள் வெகு நேர்த்தியாக பந்து வீசினர். முதல் இன்னிங்சில் ஓஜா நன்கு பந்து வீசினார். 2-வது இன்னிங்சில் அஸ்வின் அபாரமாக பந்து வீசினார் . அவர்களுக்கு பக்க பலமாக உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் பந்து வீசினர். டெல்லியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் போது,டெண்டு ல்கர் டெஸ்ட் போட்டியில் 15,000 ரன்னைக் கடந்து புதிய சாதனை படைத்தார். அறிமுக சுழற் பந்து வீச்சாளரான அஸ்வின் மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே யான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் கடந்த 6 -ம் தேதி துவங்கி நேற்றுட ன் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவு அணி முதல் இன்னிங்சில், 108.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 304 ரன்னை எடுத்தது. சந்தர்பால் 118 ரன்னையும், பிராத் வட்டே 63 ரன் னையும், கீப்பர் பாக் 27 ரன்னையும் எடுத்தனர். பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 52.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 208 ரன்னில் ஆட்டம் இழந்தது. சேவாக் 55 ரன்னையும், டிராவிட் 54 ரன்னையும், காம்பீர் 41 ரன்னையும், யுவரா ஜ் சிங் 23 ரன்னையும் எடுத்தனர். அடுத்து 2 -வது இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி, 57.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 180  ரன்னில் சுருண்டது. சந்தர்பால் 47 ரன்னையும், கேப்டன் சம்மி 42 ரன்னையும், கே.ஏ. எட்வ ர்ட்ஸ் 33 ரன்னையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், அஸ்வின் 46 ரன்னைக் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 36 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார். தவிர, இஷாந்த் சர்மா மற்றும் ஓஜா ஆகியோர் தலா 1 விக்கெ ட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago