முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் சோதனை

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில்,நவ.11 - குமரி மாவட்ட முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான சுரேஷ் ராஜன் நெல்லை மாவட்டம் பழவூரில் என்.எஸ்.ஆர். ஸ்டீல் பிளாண்ட் என்ற பெயரில் ஸ்டீல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையின் அலுவலகம் நாகர்கோவில் வெள்ளாளர் கிழக்கு காலனியில் உள்ளது. நேற்று முன்தினம் காலை நெல்லை மண்டல வணிகவரித்துறை இணை ஆணையர் சேகர் தலைமையில் மதுரையில் இருந்து 20 பேர் கொண்ட குழுவினர் நாகர்கோவிலில் உள்ள அலுவலகம், பழவூரில் உள்ள தொழிற்சாலை ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் சோதனை நடத்திய போது அங்கு சுரேஷ் ராஜனின் மனைவி பாரதி இருந்துள்ளார். அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்தவித முக்கிய ஆவணங்களும் சிக்கவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது. 

இந்நிலையில் நேற்று காலையும் வணிகவரித்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனின் ஸ்டீஸ் பிளாண்ட் அலுவலகத்திற்கு 2 வாகனங்களில் வந்தனர். தொடர்ந்து அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய தடயங்கள் எதும் சிக்காத நிலையில் நேற்று 2வது நாளாக சோதனை நடைபெற்றது. கடந்த மாதம் 8ம் தேதி சுரேஷ் ராஜனின் வீடு, அவரது உறவினர் வீடு, தொழிற்சாலை, அலுவலகங்கள் என்று 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறினர். ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டதாலும், அவற்றை நிதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்ட நிலையிலும் தற்போது சோதனை நடத்திய வணிக வரித்துறையினர் வசம் ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை. 

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கோவையில் இருந்து வந்திருந்த குழுவினர் இதே தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனை வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்