முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராயபுரத்தில் 464 குடிசை மாற்று வீடுகள் குடியிருப்பு

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.11 - சென்னை ராயபுரத்தில் ரூ.17 கோடி 73 லட்சம் செலவில் 3 அடுக்குகள் கொண்ட 464 குடிசை மாற்று வாரிய வீடுகள் குடியிருப்பை காணொலி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (10.11.2011) தலைமைச் செயலகத்தில், சென்னை, இராயபுரம் சட்டமன்றத் தொகுதி, காசிமேடு குப்பம் பகுதியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 17 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 464 குடியிருப்புகளைக் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்து, 7 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை வழங்கினார்.

சென்னை இராயபுரம் சட்டமன்ற தொகுதி மாநகராட்சி வட்ட எண்.50​ல் அமைந்துள்ள காசிமேடு குப்பம் பகுதியில் 1978 ​ 1979 ஆம் ஆண்டு,  தரை மற்றும் 3 அடுக்குகள் கொண்ட 464 குடியிருப்புகள் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இக்குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து குடியிருப்பதற்கு பாதுகாப்பின்றி இருந்ததால் அரசால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவின் பரிந்துரையின்படி இக்குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதிய குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டது. இதன்படி, அரசின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு 12​வது நிதிக்குழுவின் மானியத்தின் கீழ் 464  குடியிருப்புகளை இடித்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் புதிய குடியிருப்புகளைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அதன்படி, பழுதடைந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதிய குடியிருப்புகள் 17 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகளில் வசித்து வந்த 464 ஒதுக்கீடுதாரர்களுக்கே இப்புதிய குடியிருப்புகள் மீண்டும் ஒப்படைக்கப்படுகிறது. இக்குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 347 சதுரஅடி பரப்பளவில் பல்நோக்கு அறை, சமையல் அறை, கழிவறை மற்றும் குளியல் அறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும் இத்திட்டப்பகுதியில் கீழ்நிலைத்தொட்டி மூலமாக குடிநீர் வசதி, கழிவு நீர் இணைப்பு, குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வசதி, தார்ச்சாலை வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி மற்றும் தெரு விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, இராயபுரம் சட்டமன்றத் தொகுதி, காசிமேடு குப்பம் பகுதியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 17 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 464 குடியிருப்புகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்து, 7 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணையினை வழங்கினார். 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணையினை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தங்கள் மீனவ சமுதாய மக்களுக்காக பல்வேறு நல்ல பல நலத்திட்ட உதவிகளை வழங்கி மீனவ மக்களின் வாழ்வில் ஓளியேற்றி அவர்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்வின்போது,  தமிழக சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார்,  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!