முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரணம்

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, நவ.11 - 10 மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரண தொகையை முதல்வர் ஜெயலலிதா வழங்கி திட்டத்தை துவக்கிவைத்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (10.11.2011) தலைமைச் செயலகத்தில், கடல் மீன்பிடிப்பு குறைந்த காலத்தில் மீனவக் குடும்பங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் விதமாக, மீனவக் குடும்பம் ஒன்றுக்கு 4000 ரூபாய் வீதம் நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து, 10 கடல் மீனவக் குடும்பங்களுக்குக் காசோலைகளை வழங்கினார். தமிழகக் கடலோரப் பகுதியில் ஒவ்வொரு வருடமும் பருவ மழைக் காலங்களில், பாதகமான பருவச் சூழ்நிலை மற்றும் வங்காள விரிகுடாப் பகுதியில் புயல் சின்னம் உருவாகுதல் ஆகிய காரணங்களினால், கடல் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடலில் மீன்பிடிப்பு மேற்கொள்ள இயலுவதில்லை.  எனவே, பருவமழைக் காலங்களான மூன்று மாதங்கள் மீன்பிடி குறைந்தக் காலங்களாக கருதப்படுகின்றன.

தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மீன்பிடி குறைந்த காலங்களில், கடல் மீனவர் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் அல்லலுறுவதால் அவர்களின் துயரினை துடைக்கும் பொருட்டு, மீன்பிடிப்பு குறைந்த காலத்திற்கு கடல் மீனவர் குடும்பம் ஒன்றுக்கு 4000 ரூபாய் வீதம் நிவாரணத் தொகை வழங்க 25.10.2011 அன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். 

இதன்படி திருவள்ளூரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை உள்ள மாவட்டங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்கள்; கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்கள் மற்றும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான மூன்று மாதங்கள் மீன்பிடிப்பு குறைந்த காலம் ஆகும்.   

மீன் பிடிப்பு குறைந்த காலத்தில் மீனவக் குடும்பங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் விதமாக, 70 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 591 மீனவர் கிராமங்களில் வசிக்கும் சுமார் 1,70,000 மீனவக் குடும்பங்கள் பயன்பெறுவர்.  கடல் மீன்பிடிப்புக் குறைந்த காலத்தில் மீனவக் குடும்பங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் விதமாக, மீனவக் குடும்பம் ஒன்றுக்கு 4000 ரூபாய் வீதம் நிவாரணத் தொகை வழங்கும் புதிய திட்டத்தினை தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்து, 10 கடல் மீனவக் குடும்பங்களுக்கு காசோலைகளை வழங்கினார்.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு, மீன்பிடிப்பு குறைந்த 3 மாதங்களுக்கு, தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ், கடல் மீனவர் ஒவ்வொருவருக்கும் 1800 ரூபாய் வீதம் நிவாரணத் தொகையும் தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையிலான அரசு வழங்கி வருகிறது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து காசோலைகளைப் பெற்றுக் கொண்ட கடல் மீனவர்கள், மீனவர்கள் நலனின் பால் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தும், நிவாரண உதவிகளை உயர்த்தி வழங்கியும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரும் முதலமைச்சருக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள். இந்நிகழ்வின்போது,  மீன்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத்துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago