முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு அணையில் மத்திய நிபுணர் குழு

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

கம்பம், நவ. 11  - முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட ஐவர் குழுவிடம் கேரள அரசு பெரியாறு அணையின் ஒரு பகுதியான பேபி அணையின் கீழ் பகுதியில் போதியளவு பாறை இல்லாமல் இறுக்கமற்ற மண்ணில் அணை கட்டப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக ஐவர் குழுவினரின் உத்தரவுப்படி சென்னையில் உள்ள மத்திய ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவின் முதுநிலை ஆராய்ச்சியாளர் டால்ஸ் மணி, ராஜேஷ் சல்வால் ஆராய்ச்சியாளர் கருப்பையா ஆகியோர் அடங்கிய குழுவினர் முல்லைப் பெரியாறு அணைக்கு சென்றனர். அணை பகுதியில் உள்ள பேபி அணையில் முதல் கட்ட ஆய்வை தொடங்கினர். பின்னர் மீண்டும் பேபி அணையின் கீழ் பகுதியில் மண்ணின் தன்மை, பாறை குறித்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு நடத்துவதற்காகவே முதல் கட்ட ஆய்வை நடத்தியதாக தெரிவித்தனர். இது குறித்து ஐவர் குழுவிடம் அறிக்கை அளிக்க உள்ளதாக நிபுணர் குழுவினர் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது தமிழக, கேரள அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்