முக்கிய செய்திகள்

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் கூட்டாளி கைது

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,நவ.11  - ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் உதவியாளர் சஞ்சய் சவுத்ரி துபாயில் கைது செய்யப்பட்டார். மதுகோடா சட்டவிரோதமாக முதலீடு செய்வதற்கு சஞ்சய் உதவி வந்துள்ளார். ஜார்கண்டில் சுரங்க தொழிலில் ஈடுபட விரும்பிய மும்பை நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்று தருவதாக கூறி ரூ. 13 கோடி வரை மோசடி செய்ததாக சஞ்சய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு குடியரசு மற்றும் இன்டர்போல் தந்த தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார் என்று சி.பி.ஐ. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: