முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகையில் வெள்ள அபாயம் நீங்கியது

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, நவ. 11 - அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் குறைந்த அளவு தண்ணீரே திறக்கப்படுவதால் வைகை ஆற்றில் வெள்ள அபாயம் நீங்கியது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் கடந்த 2 வாரங்களாக மழை கொட்டித் தீர்த்தது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீடித்ததால் பெரியாறு, வைகை அணைகளுக்கு அதிகளவில் தண்ணீர் வந்ததில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் வைகை அணையின் நீர் மட்டும் 69 அடியை தொட்டது. இதனால் 3 ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதனால் மதுரை மாநகரில் தரைப் பாலங்கள் மூழ்கின. இதையடுத்து இந்த பாலங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இரவு, பகலாக இந்த பாலங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். 

கடந்த புதன் கிழமையன்று அணைகளின் நீர்ப்பிடிப்பு மற்றும் மதுரை சுற்று வட்டார மாவட்டங்களிலும் மழை பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு காட்டாற்றுகளில் இருந்து மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் வைகை அணைக்கு விநாடிக்கு 2,449 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு பாசன கால்வாய்களில் 1,300 கன அடியும், குடிநீர் திட்டங்களுக்கு 60 கன அடியும், வைகை ஆற்றில் 730 கன அடியும் தண்ணீர் விடப்படுகிறது. இதனால் வைகையில் வெள்ள அபாயம் நீங்கியது. மாநகரில் போலீசார் தடை விதிக்கப்பட்டிருந்த 3 தரைப் பாலங்களும் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்