முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட்: இந்திய அணியில் மாற்றம் இல்லை

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, நவ. 11 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நாளை (12) துவங்க இருக்கும் 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான இந் திய அணியில் மாற்றம் எதுவும் இல்லை. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற அதே அணியே இதிலும் பங்கேற்க இருக்கிறது. இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதன் முத ல் போட்டி புதுடெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தி ல் கடந்த வாரம் நடந்தது. 

டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது. 5 நாள் திட்டமிடப்பட்ட இந்தப் போட்டி 4 -வது நாளன்றே முடிந்தது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில், நட்சத்திர வீரர் டெண்டுல் கர், சேவாக், காம்பீர், டிராவிட் மற்றும் லக்ஷ்மண் ஆகியோர் அபார மாக பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

பெளலிங்கில் அறிமுக சுழற் பந்து வீச்சாளரான அஸ்வின் மற்றும் ஓஜா இருவரும் கலக்கினர். ஓஜா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டை யும், 2 -வது இன்னிங்சில் 1 விக்கெட்டும் எடுத்தார். 

தமிழக வீரரான அஸ்வின் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டையும், முத ல் இன்னிங்சில் 3 விக்கெட்டையும் கைப்பற்றினார். இறுதியில் ஆட்ட நாயகன் விருதினையும் தட்டிச் சென்றார். 

மேற்படி இருவரும் சிறப்பாக பந்து வீசியதால் இந்த டெஸ்டிலும் அவர்கள் இடம் பெற்று உள்ளனர். இதனால் மூத்த சுழற் பந்து வீச்சா ளரான ஹர்பஜனிற்கு இந்த டெஸ்டிலும் வாய்ப்பு இல்லை. 

இந்த டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வீரரான டெண்டுல்கர், டெஸ்ட்  போட்டியில் 15,000 ரன்னைக் கடந்து புதிய மைல் கல்லைப் பதித்தார். அறிமுக வீரரான அஸ்வின் 9 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். 

இந்திய அணியில் டெண்டுல்கர், சேவாக், காம்பீர், டிராவிட், லக்ஷ்ம ண் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இருந்த போதிலும், டெண்டுல்கர் தனது 100 -வது சதத்தை எட்டாதது ரசிகர்க ளுக்கு ஏமாற்றத்தை அளித்தது. கொல்கத்தா மைதானம் டெண்டுல்கரு க்கு ராசியான மைதானமாகும். 

மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில், சந்தர்பால் முதல் இன்னிங்சி ல் சதம் அடித்தார். தவிர, பிராட்வடே, கே. எட்வர்ட்ஸ், எச். எட்வர்ட்ஸ் மற்றும் சாமுவேல்ஸ் ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். 

அதே போல பெளலிங்கில் கேமர் ரோச், கேப்டன் டேரன் சம்மி, பிஷூ போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். முதல் போட்டியில் அந்த அணி தோல்வி அடைந்ததால் 2 -வது போட்டியில் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்