முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவில் மன்மோகன் பாக். பிரதமர் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

அட்டூ அடோல், நவ.11 - மாலத்தீவில் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஜா கிலானி சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். தெற்காசிய நாடுகளின் உச்சி மாநாடு நேற்று மாலத்தீவில் உள்ள அட்டு தீவில் துவங்கியது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஜா கிலானி உள்பட 8 தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஜா கிலானி நேற்று சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த முக்கிய சந்திப்பின்போது தீவிரவாதம், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது.

இது மட்டுமல்லாமல் இரு தரப்பு உறவுகள் குறித்தும் இவர்கள் விவாதித்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், இந்த பேச்சுவார்த்தை பலன் உள்ளதாக இருந்தது என்றார்.

பாகிஸ்தான் பிரதமர் கிலானி சமாதானத்தின் மனிதர் என்றும் இந்த நம்பிக்கை மேலும் தொடரும் என்றும் அவர் கூறினார்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை பலன் கொடுக்கும் வகையில் இருக்கும் என்றும் பலன்கள் ஒருங்கிணைந்ததாக இருக்கும் என்றும் மன்மோகன் சிங் கூறினார்.

இதேபோன்ற கருத்துக்களை பாக். பிரதமர் கிலானியும் தெரிவித்தார்.

ஆனால் இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது  எந்த தேதியில் சந்தித்து பேசுவார்கள் என்ற விவரங்களை இரு தலைவர்களுமே தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago