முக்கிய செய்திகள்

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: ஆ. ராசாவின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, நவ. -12 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் சாட்சியம் அளிக்கும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்பவில்லை என்று கூறி முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தாக்கல் செய்த மனுவை டெல்லி சிறப்பு நீதமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி நிராகரித்து விட்டார்.  2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்று சாட்சிகள் விசாரணை தொடங்கியது. அப்போது ராசாவின் வக்கீல் சுசில்குமார் ஒரு கோரிக்கை மனுவை வைத்தார். அதில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகார வழக்கில் 2009 அக்டோபர் 21 ம் தேதி சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது. இந்த விசாரணை முடிந்து சி.ஆர்.பி.சி. சட்டம் 244 வது பிரிவின்படி அனைத்து வாக்குமூலங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்ட பின்னர்தான் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய முடியும். ஆனால் லூப் டெலிகாம் மீதான விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்று சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. எனவே அந்த விசாரணை முடியும் வரை மனுதாரர்(ராசா) அரசு தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்பவில்லை. குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான விசாரணை முடிந்து விட்டதா? என்று சி.பி.ஐ. யிடம் கோர்ட் விளக்கம் கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார் ராசா. இருப்பினும் இந்த மனுவை நீதிபதி ஷைனி நிராகரித்து விட்டார். அதன் பின்னர் சாட்சிகளிடம் விசாரணை துவங்கியது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: