முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கியில் நிலநடுக்கம்: 7 பேர் உயிரிழந்தனர்

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

அங்காரா, நவ.- 12 - துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். துருக்கியின் கிழக்குப் பகுதியில் உள்ள வான் மாகாணத்தில் கடந்த புதன் கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 5.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் இப்பகுதியில் உள்ள 25 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 3 கட்டிடங்களில் இருந்தவர்களில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பலியானார்கள். இடிபாடுகளில் இருந்து 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் இடுபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த மாதம் 23 ம் தேதியில் இதே பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் இப்பகுதியில் பல கட்டிடங்கள் சேதமுற்றிருந்தன. அதனால் அந்த கட்டிடங்களில் மக்கள் தங்காமல் முகாம்களில் தங்கி இருந்தனர். இதனால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் கட்டிட இடிபாடுகளில் இருந்து ஏராளமானோரின் கூக்குரல்கள் கேட்பதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.  இந்த நிலநடுக்கத்தின் மையம் எட்ரிமிட் பகுதியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்தது.
கடந்த நிலநடுக்கத்தில் 600 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்