முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆர்.பி.உதயகுமார் பேச்சு

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சாத்தூர், நவ.- 12 - தமிழகத்தில் வெண்மைப் புரட்சி பசுமைப் புரட்சியுடன் அறிவுப்புரட்சி செய்த ஒரே முதல்வர் ஜெயலலிதா ஒருவர்தான் என்று சாத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேசினார். சாத்தூர் தொகுதியில் உள்ள தூங்காரெட்டியபட்டியிலும் பொம்மங்கிபுரத்திலும் தமிழக அரசின் சிறப்பு நலத்திட்ட உதவிகளான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தூங்காரெட்டியபட்டியில் 53 பயனாளிகளுக்கும், கொம்மங்கிபுரத்தில் 393 பயனாளிகளுக்கும் விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸிகளை முன்னாள் அமைச்சரும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கி பேசினார்.  அவர் பேசியதாவது, இன்று பெளர்ணமியும் வெள்ளிக்கிழமையும் இணைந்த லட்சுமிகரமான நன்னாளாகும். இந்த நல்ல நாளில் உங்களுக்கெல்லாம் தாய்வீட்டு சீதனமாக, இந்த விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தங்களது வீடுகளுக்கு கொண்டுசென்று நீங்கள் அனைவரும் சுபீட்சமாக, சந்தோஷமாக உங்கள் குடும்பத்தாருடன் நீடூழி வாழ வேண்டும். தேர்தல் நேரத்தில் சொன்னதை மின்னல் வேகத்தில் நிறைவேற்றி வருகின்ற இந்தியத் திருநாட்டின் ஒரே முதலமைச்சர் நமது அம்மா ஆவார். தமிழகத்தின் ஏழு கோடி மக்களுக்காக இரவும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கிறார். அவர் ஆட்சிப்  பொறுப்பை ஏற்ற அடுத்த நிமிடத்திலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்படுத்தப்பட்டு இன்று தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. எல்லாத் தரப்பினரும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர். இந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற தொலைநோக்கில் சட்டமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த கால ஆட்சியில் கருணாநிதியின் ஒரு குடும்பம் மட்டுமே பயன்பெற்றது. ஆனால் இன்று அம்மா அவர்கள் ஆட்சியில் 7 கோடி மக்களும் பயன்பெற்று அமைதியாக வாழ்கிறார்கள்.
இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை அம்மா அறிவிக்கின்றபோது, இவற்றையெல்லாம் தர முடியுமா? என்று பலர் கேட்டனர். கொடுக்கின்ற மனமிருந்தால் எல்லாம் தரமுடியும் நமது முதல்வர் அம்மா சொன்னார்கள். அவர் சொன்னபடி இங்கு சிறப்பு நலத்திட்ட உதவிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. ஏரத்தாழ ஒன்றரை வருடத்திற்குள் தமிழகம் முழுவதும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவிடும் என்று முதல்வர் அம்மா தெரிவித்துள்ளார். எனவே அனைவருக்கும் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி கிடைத்துவிடும் என்பது உறுதி.  தமிழகத்தில் முதல்வர் அம்மா வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி, அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.அதன் அடிப்படையில் விவசாயத்தில் நவீன யுக்திகள் கையாளப்பட்டு இன்று பசுமைப் புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மை பெறவேண்டும் என்பதற்காக லேப் டாப் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு இன்று கடைக்கோடியில் இருக்கும் மாணவ-மாணவியருக்கும் அறிவுப் புரட்சியை ஏற்படுத்த வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேலை வாய்ப்பற்ற கிராம மக்கள் பயனடைய அவர்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டு கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர்.  நமது முதலமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் உங்களுக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க. அரசு மக்கள் ஜனநாயக அரசாக இன்று செயல்பட்டு வருகிறது. இந்திய திருநாட்டின் திருவிளக்காய் உலகை ஆளுகின்ற வல்லமைபெற்ற ஒப்பற்ற நமது முதலமைச்சர் தமிழக மக்களுக்காக நல்ல பல திட்டங்களை தினம் தினம் கொண்டுவந்து நிறைவேற்றி வருகிறார். அவரது வழியில் அயராது உழைப்போம்.  இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் விருதுநகர் மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தா அழகர்சாமி, சாத்தூர் ஒன்றிய சேர்மன் வேலாயுதம், வெம்பக்கோட்டை ஒன்றியச் சேர்மன் ரேவதி, துணைச் சேர்மன் மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்புராம், சசீலா, பாலமுருகன், சாத்தூர் தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், நகரச் செயலாளர் என்.எஸ்.வாசன், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மகேஷ் செல்வம், சுபா பரமராஜ், தொகுதி இணைச் செயலாளர் தாசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அழகர்சாமி, சண்முகக்கனி, காசி துரைப்பாண்டியன், ஏழாயிரம்பண்ணை ராஜேந்திரன், ரெட்டியபட்டி சமுத்திரம், குகன்பாறை ராஜ், சிப்பிப்பாறை கவுன்சிலர் ஜெயராஜ், மினுத்தான், விஜயாபோஸ், ஏழாயிரம்பண்ணை துரைராஜ், கனகராஜ், கணேசன், சந்தனமாரி, சீனிவாசன், காளியப்பன், கிளைச் செயலாளர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சாத்தூர் தாசில்தார் கு.பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய் அதிகாரிகள் செய்திருந்தனர். முன்னதாக சிவகாசி கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago