முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்களை மூடிக் கொண்டு கிலானியை நான் அப்படியே நம்பி விடவில்லை : மன்மோகன்சிங்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

அட்டு, நவ. 14- கண்களை மூடிக் கொண்டு கிலானியை நான் அப்படியே நம்பி விடவில்லை என்றும், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டால் அதை நான் மகிழ்ச்சியோடு வரவேற்பேன் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். மாலத்தீவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு தாயகம் திரும்பிய பிரதமர் மன்மோகன்சிங் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது இதை தெரிவித்தார். காங்கிரசின் செயல் தலைவராக ராகுலை நியமிப்பது என்பது கட்சியின் விவகாரம். கட்சியில் ராகுலுக்கு எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதை முழு மனதோடு வரவேற்பேன் என்றார். 

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அத்துமீறி தாக்கப்படுவது குறித்து மாலத்தீவில் இலங்கை அதிபருடன் ஆலோசித்தேன். இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அவர் ஒப்புக் கொண்டார். இந்த பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்தார்.  பாகிஸ்தான் பிரதமர் கிலானி அமைதியை நேசிக்கும் மனிதர். 4 முறை அவரை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேசியுள்ளேன். அனைத்து சந்திப்பிலுமே இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு சுமூகமான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்பதையே அவர் வலியுறுத்தினார். அமைதியின் அவசியத்தை அவர் உணர்ந்திருப்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும் கிலானியை நான் கண்களை மூடிக் கொண்டு அப்படியே நம்பி விடவில்லை என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்