முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய நோபல் விஞ்ஞானி மறைவு

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், நவ. 14 அமெரிக்கவாழ் இந்தியரும், நோபல் பரிசு பெற்ற உயிரி வேதியியல் விஞ்ஞானியுமான ஹர்கோவிந்த் குரானா(89) காலமானார். மாஸக்ஸெட்ஸ் மாநிலத்தின் கான்கார்டு நகரில் வசித்து வந்த அவர் முதுமையால் இயற்கை மரணமடைந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ஆர்.என்.ஏ. குறித்த அவரது ஆய்வு மருத்துவத் துறையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இதற்காக அவர் கடந்த 198 ல் நோபல் பரிசு பெற்றார். 1960 முதல் 1970 வரை அமெரிக்காவில் உள்ள விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தில் உயிரிவேதியியல் பேராசிரியராக பணிபுரிந்தார். 1970 ல் இருந்து பிரபலமான மாஸகஸெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்தார். இப்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ராய்ப்பூர் என்ற கிராமத்தில் 1922 ல் பிறந்தார் ஹர்கோவிந்த்குரானா. இவருக்கு ஜூலியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்