முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதாரண்யம் அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: ஒருவர் கைது

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

வேதாரண்யம், நவ.14- வேதாரண்யம் அருகே ரூ. 80 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சேத்தாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யநாதன். இவரது மகன் ஆல்பர்ட் (36). இவர் 1989 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து அகதியாக வந்து இங்கு குடியேறியவர். பிறகு இதே கிராமத்தைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரி அமுதா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.  இந்தநிலையில் ஆல்பர்ட் வீட்டில் ஹெராயின் போதைப்பொருள் இருப்பதாக வேதாரண்யம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டி.எஸ்.பி. குணசேகரன், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லத்துரை, பசுபதி ஆகியோர் நேற்று அதிகாலையில் அந்த வீட்டுக்குச் சென்று அங்கு அதிரடி சோதனையிட்டனர். அப்போது ஆல்பர்ட் வீட்டின் பரணில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 885 கிராம் எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 80 லட்சமாகும். இந்த போதைப் பொருள் 3 கவர்களில் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஆப்கானிஸ்தான் 2005, 2010 என்று எழுதப்பட்டிருந்தது. எச்சரிக்கை படமும் அதில் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக ஆல்பர்ட் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் ஆய்வுக்கூடத்திற்கு பரிசோனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 11 ம் தேதி நாகை மாவட்டத்தில் சென்னைக்கு கடத்த இருந்த ரூ. நாலரைக் கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்