முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெற்றியில் ஒற்றைக் கண்னுடன் பிறந்த ஆட்டுக்குட்டி

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கல்பாக்கம், நவ.15 - காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ளது அம்மனம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஏழுமலை(66). இவர் பரம்பரை பரம்பரையாக ஆடுகள் வளர்த்து வருகிறார். இவரிடம் தற்போது 30 ஆடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு இவரது ஆடுகளில் ஒரு ஆடு 9.30 மணியளவில் முதன் முதலில் ஒரு குட்டியை ஈன்றது. அந்த குட்டி ஆண் குட்டியாகும். குட்டியை பத்திரமாக எடுத்து பார்த்தபோது, இருபக்கமும் கண்கள் இல்லாமல் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்த அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், நெற்றியில் மட்டும் ஒரு கண்னுடன் திறந்த நிலையில் ஆரோக்கியத்துடன் இருந்தது. இதை அறிந்த ஊர் மக்கள், மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் மக்கள் அதிசயத்துடன் வந்து ஆட்டுக்குட்டியை பார்த்து செல்கின்றனர். 

இதுபற்றி விவசாயி ஏழுமலை கூறுகையில், நாங்கள் எவ்வளவோ ஆடுகள் வளர்த்துள்ளோம். நிறைய குட்டிகளை ஆடுகள் ஈன்றுள்ளன. ஆனால் முதன்முதலில் ஒற்றைக் கண்னுடன் பிறந்திருப்பது ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்தார். 

நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என சிவப்பெருமானிடம் நக்கீரர் வாதிடுவதை கேட்டிருக்கிறோம். திரைப்படங்களில் சிவன் நெற்றிக்கண் திறப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் நெற்றிக்கண் என்று ஒன்றிருப்பதை இந்த ஆட்டுக்குட்டியின் மூலம் காண்கிறோம். இந்த ஆட்டுக்குட்டி வெள்ளை- கருப்பு நிற புள்ளிப்போட்ட கலரில் காணப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்