முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சரை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுச்சேரி, நவ.15 - தேடப்படும் குற்றவாளியான முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரத்தை தமிழக போலீசாரிடம் புதுவை முதல்வர் ஒப்படைக்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார். புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 40 நாட்களாக புதுவை மாநிலத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தி வரும் புதுவை கல்வித்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வேறு வழியே இல்லாமல் முதல்வர் காலம் கடந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். 

தேடப்படும் குற்றவாளியான கல்யாணசுந்தரத்தை தமிழக போலீசாரிடம் புதுவை முதல்வர் ஒப்படைக்க வேண்டும். முன்னாள் அமைச்சருக்கு அடைக்கலம் கொடுப்பதின் மூலம் சட்ட விரோதமாக முதல்வர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இது இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் வீணான சச்சரவை உருவாக்கி உள்ளது. 

எனவே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வரும் முன்னாள் அமைச்சரை உடனடியாக தமிழக போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். 

ஏனாமில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரணை கைதி தேவசக்திபாபு போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்து மரணம் அடைந்துள்ளார். இதற்கு காவல்துறையும், அந்த அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணமாகும். கைதியின் மரணம் குறித்த விசாரணைக்கு ஏனாம் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கையே. மரணம் அடைந்தவர் குடும்பத்துக்கு புதுவை அரசு இழப்பீட்டு தொகையாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். இந்த மரணத்திற்கு அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். 

கடந்த 6, 7 ஆண்டுகளாக நிர்வாகம் ஏனாமில் அரசு கட்டுப்பாட்டில் இல்லை. குறிப்பாக எம்.எல்.ஏ.வும், அப்போதைய அமைச்சருமானவரின் தவறான வழிகாட்டு தலுக்கு அதிகாரிகள் செயல்பட்டு வந்தனர். சட்ட விரோத செயல்கள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

மக்கள் நலப்பணி என்ற பெயரில் முதலாளிகள் மிரட்டப்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் மண்டல நிர்வாக அதிகாரி முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் எரிவாயு எடுக்கும் பணிக்காக ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் ஏனாமில் குழாய்கள் புதைக்கப்பட்டது. இதற்கான ராயல்டி தொகை அரசுக்குத்தான் வர வேண்டும். ஆனால் ரூ.80 கோடியை தனிப்பட்ட முறையில் ஏனாம் வளர்ச்சிக்கு என அமைச்சரே பெற்றுக் கொண்டுள்ளார். 

இந்த பணம் அரசுக்கு வரவே இல்லை. ஆனால் இப்போது குஜராத்தை சேர்ந்த அரசு நிறுவனம் எரிவாயு எடுக்க ஏனாமில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட உள்ளது. இந்த பணியை மீனவர்களை தூண்டி மல்லாடி கிருஷ்ணாராவ் தடுக்க பார்க்கிறார். 

மீனவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். அந்த நிறுவனம் இழப்பீடு வழங்கியதா? தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக மல்லாடி கிருஷ்ணாராவின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியும் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago