முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுமின் நிலைய விழிப்புணர்வு கூட்டம்: கலாம் பேசுகிறார்

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,நவ.15 - தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியில் கூடங்குளம் அணுமின் நிலையம் திட்டத்தின் பங்கு குறித்த விழிப்புணர்வுக்கூட்டம் மடீட்சியா அரங்கில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலம் தலைமையில் வரும் 18-ம் தேதி நடக்கிறது. தொழில் வளம் பெருக வேண்டும் என்றால் மின்சார உற்பத்தி பெருக வேண்டும், அதுவும் குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் களம் வேண்டும், அதற்கு அணுமின் உற்பத்தி அவசியம் தேவை, இந்தியா வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் உள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 8.5 சதவீதத்தை எட்டியுள்ளது. மின்பற்றாக்குறையால் இந்தியா குறிப்பிடும் படியான வளர்ச்சியை அடைய முடியவில்லை. சீனா போன்ற நாடுகள் 12 முதல் 13 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என்றால் மின்உற்பத்தி அவசியம். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையால் சிறு, குறுந்தொழில்களின் வளர்ச்சி குறைந்துள்ளது. இச்சூழ்நிலையில் தமிழகத்தில் அமைய உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் நமது மின்தேவையை எளிதாக பூர்த்தி செய்து கொள்ளும் ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நாம் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேம். 

வரும் 18 -ம் தேதி அன்று மடீட்சியா அரங்கில் மாலை 4 மணிக்கு தொழில் வளர்ச்சியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அவசியம், நன்மைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்காலம், முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர்  டாக்டர் கார்த்திகேயன்,  அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ், கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குனர் ஆர்.பானர்ஜி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை பொது மேலாளர் விஞ்ஞானி சிவசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமிளிக்க உள்ளார்கள். 

இக்கூட்டத்தில் சிறுதொழிலதிபர்கள், வர்த்தகர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொள்ளலாம் என மடீட்சியா தலைவர் வி.எஸ்.மணிமாறன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago