முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி - துவாரகை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, நவ. 15 - மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி - துவாரகை விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் துவாரகையில் தொடங்கப்பட்டுள்ளது. துவாரகையில் கடந்த சனிக்கிழமை பகல் 10 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் நேற்று பகல் ஒரு மணிக்கு மதுரையை வந்தடைந்தது. மதுரையில் இருந்து பகல் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு தூத்துக்குடியை சென்றடைந்தது. மதுரை - துவாரகை எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண் 09567) இன்று 15 ம் தேதி மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு வரும் 17 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு துவாரகை சென்றடையும். 

இந்த ரயிலில் 1 ஏ.சி - 2 டயர், 2 ஏ.சி - 3 டயர், 7 சிலீப்பர் வகுப்புகள், 6 பொது 2 ம் வகுப்பு மற்றும் 2 சரக்கு பெட்டிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த ரயில் ஜாம்நகர், ராஜ்கோட், ஆமதாபாத், வடோதரா, பரூச், சூரத், வல்சாத், வாபி, வாகை ரோடு, கல்யாண், லோனவாலா, புனே, சோலாப்பூர், குல்பர்க்கா, வாடி, ரெய்ச்சூர், மந்த்ராலயம் ரோடு, குண்டக்கல், தர்மாவரம், ஹிந்தப்பூர், எலஹங்கா, கிருஷ்ணராஜபுரம், பங்கார்பேட், சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என்று மதுரை கோட்ட ரயில்வே முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago