முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு மின் நிலைய பாதுகாப்பு குறித்து பிரதமரை அணுக

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி. நவ.15 - அணு மின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக பிரதமரை அணுகுமாறு தொண்டு நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அணு மின் நிலையங்கள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 15 பேர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு தலைமை  நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டின்படி இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையங்கள்  தொடர்பான பாதுகாப்பை உறுதி செய்யும் வரை அந்த அணு மின் நிலையங்களின் செயல்பாட்டை நிறுத்தி வைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

இந்த வாதத்திற்கு பிறகு பேசிய தலைமை நீதிபதி இது குறித்து முதலில் பிரதமரை அணுகுமாறு மனுதாரர்களை கேட்டுக்கொண்டார்.

மேலும் இது தொடர்பான தொழில்நுட்ப விவரங்கள் தங்களுக்கு தெரியாது என்றும் ஒரு தனிப்பட்ட அணு மின் நிலையம் குறித்து மனுதாரர்கள் ஏதேனும் சொல்ல விரும்பினால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டை அணுகலாம் என்றும் தலைமை நீதிபதி கபாடியா கேட்டுக்கொண்டார்.

பிரசாந்த் பூஷன் தனது வாதத்தின்போது, அணு சக்தி ஒழுங்கு கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து பிரதருக்கு பல கடிதங்களை எழுதியுள்ளதாக தெரிவித்தார். ஆனால் அப்படி கடிதங்கள் எதுவும் பிரதமருக்கு வரவில்லை என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அப்படி அனுப்பப்பட்ட கடிதங்களின் நகல்கள் இருந்தால் அவற்றை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிறகு இந்த வழக்கு விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்