முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி பிரதிநிதிகள் பாலமாக இருக்க வேண்டும்: முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.15 - புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். சென்னையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளின் 2 நாள் மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் அரசு நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட வேண்டும். உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பையும், ஒத்துழைப்பையும் உறுதி செய்யும் பணியில் மாவட்ட கலெக்டர்கள் ஈடுபட வேண்டும். அரசு திட்டங்களை குறித்த காலத்திற்குள் முடிப்பதற்கான அறிவுரைகளை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு மாவட்ட கலெக்டர்கள் வழங்க வேண்டும். குடிநீர் வசதி, திடக்கழிவு மேலாண்மை, சிறந்த சாலை வசதி ஆகியவற்றை வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய இலக்காக கொள்ள வேண்டும். கிராமங்கள் குப்பை மேடாக காணப்படுவது மாற வேண்டும். சுகாதாரமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்