முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவீன அக்னி ஏவுகணை இன்று சோதனை

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ.15 - மேம்படுத்தப்பட்ட அக்னி 2 பிரைம் ஏவுகணை இன்று சோதித்து பார்க்கப்படவுள்ளது. ஒரிசாவில் உள்ள ஏவுதளத்தில் இந்த சோதனை நடைபெறவுள்ளது என்று மத்திய பாதுகாப்பு துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அக்னி 2 ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சீறி சென்று இலக்கை தாக்கவல்லது. இந்நிலையில் இதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அக்னி 2 பிரைம் ஏவுகணை வடிவமைக்கப்பட்டது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 3 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சீறி சென்று இலக்கை தாக்கவல்லது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோதனை செய்யப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சோதனை தோல்வியை தழுவியது. இப்போது தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்