முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில் பிரதமர் மலரஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ. 15 - நாட்டின் முதல் பிரதமராம் ஜவஹர்லால் நேருவின் 122 - வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் நேற்று மலரஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக அவர்கள் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடமான சாந்திவனம் சென்று அங்கு நேற்று காலையில் மலரஞ்சலி செலுத்தினார்கள். இதே போல் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியும் நேரு நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். மேலும் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியா காந்தி, டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரும் சாந்திவனம் வந்து அங்கு நேருவுக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். 

அப்போது மூவர்ண பலூன்களையும் தலைவர்கள் வானில் பறக்க விட்டனர். அப்போது பல்வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவர்கள் பேண்டுவாத்தியம் முழங்கினர். மேலும் மாணவ, மாணவிகள் தேசபக்தி பாடல்களையும் பாடினர். இதையெல்லாம் கேட்டு முக்கிய பிரமுகர்கள் ரசித்த வண்ணம் இருந்தனர். வெளிநாட்டு விவகாரங்களில் ஒரு நடுநிலைக் கொள்கையை கடைப்பிடித்தவர்தான் பண்டித ஜவஹர்லால் நேரு. 1930 களில் சுதந்திர போராட்டம் வெடித்தது. அதில் பங்கேற்ற பிரதான தலைவர்களில் பண்டித ஜவஹர்லால் நேருவும் ஒருவர். 

அணிசேரா இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் நேருவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜவஹர்லால் நேருவுக்கு நேற்று நாடு முழுவதும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். தமிழகம், புதுச்சேரியிலும் நேரு பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளால் நேரு மாமா என்று அன்போடு அழைக்கப்பட்டவர்தான் பண்டித ஜவஹர்லால் நேரு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்