முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொம்மிடி அருகே குடிநீரை பருகிய 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதன்கிழமை, 9 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

தருமபுரி, மார்ச் 10 - தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில் பராமரிக்கப்படாத மேல்நிலைத் தொட்டிகள் மூலம் வழங்கப்பட்ட குடிநீரால் அப்பகுதியில் மாணவ,மாணவியர் உட்பட ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே ஜாலியூர், புலியூர்புதூர் ஆகிய இரு கிராமங்களில் 800 க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக  ஒரு ஆழ்துளை கிணறு மற்றும் ஊரில் பொதுவாக உள்ள கிணற்றையும் உபயோகப்படுத்திவந்தனர். இங்கு உள்ள அரசு பள்ளிக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் பராமரிக்கப்படாமல் இருந்துவந்த நிலையில் திடீரென பொது கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் விநியோகிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களும், பள்ளி மாணவ -மாணவிகளும் பருகியுள்ளனர். 

இதில் இப்பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள், அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 88 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பொம்மிடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். இதில் 20 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் மிகவும் மோசமான நிலையில் பொம்மிடி மற்றும் தருமபுரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த ஓராண்டாக இக்கிராமத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்துவந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட மாசுபடிந்த குடிநீரை இப்பகுதி மக்களும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளும் பருகியதாலேயே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் இதேபோல் பல இடங்களில் பராமரிக்கப்படாமல் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை பருகியதால் உடல்நிலை பாதிக்கப்படுவது தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்