முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.16 - பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வு சென்னையில் வருகிற 18ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 01.01.2011 அன்றைய நிலவரப்படி வெளியிடப்பட்ட  முன்னுரிமைப்பட்டியலின் அடிப்படையில் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 18.11.2011 அன்று, சென்னை​8, எழும்ர், மாகாண (மகளிர்) மேல்நிலைப்பள்ளியிலும், ஆசிரியர் பயிற்றுநர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்  பணி மாறுதலுக்கான கலந்தாய்வு 19.11.2011 அன்று, சென்னை​83, அசோக்நகர், அரசு (மகளிர்) மேல்நிலைப்பள்ளியிலும், மற்றும் இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (அனைத்து பாடங்களுக்கும்) பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 20.11.2011 அன்று சென்னை​83, அசோக்நகர், அரசு (மகளிர்) மேல்நிலைப்பள்ளியிலும் கீழ்க்கண்டவாறு நடைபெற உள்ளது. கீழே குறிப்பிட்டுள்ள முன்னுரிமைப்பட்டியல் வரிசை எண்ணிற்குரிய ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை  ஆசிரியர்கள் பதவி உயர்வு எழும்பூரில் உள்ள மாகாண மகளிர் மேல்நிலைப்பள்ளி(பிரசிடென்சி பள்ளி)யில் 18.11.2011(வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணிக்கு துவங்கி நடைபெறும். 

இதில் முன்னுரிமைப்பட்டியலில் கணிதம் 1 முதல் 239 முடிய,   இயற்பியல் 1 முதல் 127 முடிய, வேதியியல் 1 முதல் 107 முடிய, தாவரவியல் 1 முதல் 74  முடிய, விலங்கியல் 1 முதல் 89  முடிய, தமிழ் 1 முதல் 150 முடிய, நகராட்சி தமிழ் 1 முதல் 2 முடிய,   இந்தியன் கல்ச்சர்-1  1 முதல் 2 முடிய, அரசியல் அறிவியல் 1  மட்டும் உடற்கல்வி இயக்குனர் நிலை1 - 1 முதல் 21 முடிய,  ஆங்கிலம் சேம் மேஜர் 1 - 1 முதல் 86 முடிய,  கிராஸ் மேஜர் 1 முதல் 86 முடிய, வணிகவியல் சேம் மேஜர் 1 - 1  முதல் 21 முடிய,   கிராஸ் மேஜர் 1 முதல் 60 முடிய, வரலாறு சேம் மேஜர் 1 - 1  முதல் 24 முடிய,   கிராஸ் மேஜர் 1 முதல் 73 முடிய, புவியியல் சேம் மேஜர் -1   1  முதல் 2 முடிய,   கிராஸ் மேஜர் 1 மட்டும், பொருளியல் சேம் மேஜர் -1  1  முதல் 22 முடிய,  கிராஸ் மேஜர் 1 முதல் 64 முடிய நடைபெறும்.

ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் பெறுபவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அசோக்நகரில் உள்ள அரசு (மகளிர்) மேல்நிலைப்பள்ளியில்  19.11.2011(சனிக்கிழமை)  காலை 9.00 மணிக்கு துவங்கி நடைபெறும்.  

இதில் முன்னுரிமைப்பட்டியலில் தமிழ் 1    முதல் 3 முடிய,     ஆங்கிலம் ​ 1 முதல் 65 முடிய,

கணிதம் 1 முதல் 198 முடிய,    இயற்பியல் ​ 1 முதல்  80 முடிய, வேதியியல் 1  முதல் 80 முடிய,   தாவரவியல் ​1 முதல் 35 முடிய, விலங்கியல் 1  முதல் 35 முடிய,  வரலாறு 1   முதல் 2 முடிய,

புவியியல் 1   முதல் 2 முடிய உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடக்கும்.

அரசு / நகராட்சி,  உயர்/மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு சென்னை அசோக்நகரில் உள்ள அரசு (மகளிர்) மேல்நிலைப் பள்ளியில் 20.11.2011 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு துவங்கி நடைபெறும்.

இதில்முற்பகலில் - தமிழ் 1  முதல் 400  முடிய, ஆங்கிலம் 1   முதல் 199    முடிய கணிதம் 1  முதல்  322   முடிய முன்னுரிமைப்பட்டியலில் உள்ளவர்களுக்கும், பிற்பகலில் - தமிழ் 401    முதல்   790   முடிய,  அறிவியல் 1  முதல் 80  முடிய,  வரலாறு 1  முதல் 389   முடிய,   உடற்கல்வி இயக்குனர் நிலை​2   1 முதல் 51 முடிய உள்ளவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

2011​- 12ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் 17.11.2011 அன்று நடைபெற உள்ளது. அனைத்து ஆசிரியர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

அரசு / நகராட்சி,  உயர்/மேல்நிலைப்பள்ளி அனைத்து வகை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு திருச்சிராப்பள்ளியில் உள்ள சையது மூர்துசா அரசு மேல்நிலைப் பள்ளியில்  17.11.2011(வியாழக்கிழமை) காலை 9.00 மணிக்கு  துவங்கி, முற்பகலில் மாவட்டத்திற்குள்ளும், பிற்பகலில் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு மாறுதல் கோருவோருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்