முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிபுணர் குழு ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை நவ-16 - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய நிபுணர் குழு நேற்று மாலை மீண்டும் ஆய்வு செய்தனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணுஉலைகள் ரஷ்யநாட்டு தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் மின் உற்பத்தி துவங்கும் என்று அணுமின் நிலைய நிர்வாகிகள் அறிவிததுள்ள நிலையில் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மக்களை திரட்டி கடந்த சில மாதங்களாக தீவிரமாக போராடி வருகிறது.  இதனால் அணுமின்நிலைய இறுதிக்கட்ட பணிகள் பாதிப்படைந்துள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் மக்களின் அச்சத்தை போக்குவதற்காக மத்திய அரசு நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துநாயகம் தலைமையில் 15பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இதே போல் மாநில அரசும் 6பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில் கடந்த8ம் தேதி நெல்லை வந்த மத்திய நிபுணர் குழு மாநில அரசு அறிவித்துள்ள குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய நிபுணர் குழுவிடம் மாநில குழுவில் இடம்பெற்றுள்ள போராட்ட குழுவினர் 50 கேள்விகள் அடங்கிய கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த கேள்விகளுக்கு 

அணுஉலையை ஆய்வு செய்த பின்னர் பதிலளிப்பதாக மத்திய நிபுணர் குழு 

தெரிவித்ததோடு அன்றைய தினமே கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு சென்று சுமார் 3 மணிநேரம் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இரண்டாவது கட்டமாக 

அணுமின்நிலையத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய நிபுணர் குழு நேற்று காலை கன்னியாகுமரி வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு முதற்கட்ட ஆலோசனை 

நடத்தினர். தொடர்ந்து கூடங்குளம் அணுஉலைக்கு வந்த நிபுணர் குழுவினர் அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இன்றும் அந்த குழுவினர் அங்கு ஆய்வு பணியை தொடர்கின்றனர். அதன்பின்னரே குழுவினர் போராட்டக் குழுவினர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பர் என்று கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்