முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்று கட்சி நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.16 - முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் காங், பா.ம.க, தே.மு.தி.க நிர்வாகிகள் உள்ளிட்ட 38 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், சுயேட்சை ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் 5 பேர், மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் 7 பேர், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர் உட்பட காங்கிரஸ், பா.ம.க., தேமுதிக கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 38 பேர் கழகத்தில் இணைந்தனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர்,  தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று, உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் 5 பேர்களும், மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் 7 பேர்களும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர், தேமுதிக​வின் தேனி மாவட்டச் செயலாளர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் உட்பட காங்கிரஸ், பா.ம.க., தேமுதிக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட 38 பேர் கழகத்தில் இணைந்தனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர்,  தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை, உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களான காவேரி எஸ். செல்வன் (7​ஆவது வார்டு), கண்ணுப்பையன் (எ) கிருஷ்ணராஜ் (8​ஆவது வார்டு), எஸ். சத்தியமூர்த்தி (24​ஆவது வார்டு), எஸ். தங்கவேல் (35​ஆவது வார்டு), கலையரசி பாலசுப்பிரமணியன் (37​ஆவது வார்டு), மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக் குழு 8​ஆவது வார்டு உறுப்பினர் வி. துளசிமணி, அரச்சலூர் பேரூராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி கோவிந்தசாமி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் என்.ஆர். தனபாலன், மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் செயலாளர்  யு.ஆர். சீனிவாசன், பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்டத் தலைவர் ஆர். ரமேஷ், ஈரோடு மத்திய மாவட்டத் தலைவர் டி. ரங்கராஜன், தேமுதிக​வின் ஈரோடு மாவட்ட தொழிற்சங்கச் செயலாளர் ஜெ. ஹக்கீம், மாவட்ட விவசாயப் பிரிவு துணைச் செயலாளரும், ஈஞ்சம்பள்ளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான திரு. எம். கைலாசம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திருமதி ஜோதிமணி கைலாசம், காசிபாளையம் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 16 பேர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.  அப்போது, ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான கே.வி. ராமலிங்கம், மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் கே. பொன்னுசாமி, எம்.எல்.ஏ., மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ஆர்.என். கிட்டுசாமி, எம்.எல்.ஏ., மொடக்குறிச்சி ஒன்றியக் கழகச் செயலாளர் காகம் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை, உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களான அ. மாரி (27​ஆவது வார்டு), மு. மோகன் (29​ஆவது வார்டு), சி. ஷாலினிதேவி (46​ஆவது வார்டு),  ஜி. காதர்அம்மாள் (57​ஆவது வார்டு),  என். ராமசுப்பிரமணியன் (58​ஆவது வார்டு), ஏ. ஹேமிதாபேகம் (96​ஆவது வார்டு), ப. சந்தியா (98​ஆவது வார்டு) ஆகியோரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கே. ரமேஷ் (எ) ராமச்சந்திரன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஆ. செந்தில்குமார், மாவட்டத் தலைவர் பொற்கை பாண்டியன், மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழக்கடை இ. சண்முகம், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஏ. பாண்டிகாமாட்சி, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் எம். வல்லத்தரசு, மதுரை மாநகர் 2​ஆம் பகுதிச் செயலாளர் எஸ். ஜீவஜோதி, மாநகர் மாவட்ட மாணவர் அணித் தலைவர் ஆர்.கே. சோமசுந்தரம், மதுரை மாநகர் 8​ஆம் பகுதி மாணவர் அணித் தலைவர் ஏ. சரவணகுமார், செயலாளர் ஏ. கண்ணன், மற்றும் மதுரை மாநகராட்சி சுயேட்சை மாமன்ற உறுப்பினர்களின் கணவர்கள் மற்றும் சகோதரர்களான  ஆழ்வார், சந்திரன், கணேசன், அக்பர்அலி, பலராமன் உள்ளிட்ட 22 பேர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.  அப்போது, மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் ஏ.கே. போஸ், எம்.எல்.ஏ., மதுரை மாநகராட்சி மேயர் திரு. வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோரும் உடன் இருந்தனர்.

கழகப் பொதுச் செயலாளர்,  தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை, தேமுதிக​வின் தேனி மாவட்டச் செயலாளரும், கூடலூர் நகர மன்றத் தலைவருமான ஆர். அருண்குமார், புதுப்பட்டி பேரூராட்சி செயலாளர் எம். சிவக்குமார், கூடலூர் நகர மன்ற 9​ஆவது வார்டு உறுப்பினர் சிராஜூதீன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.  அப்போது,  தங்க தமிழ்செல்வன், எம்.எல்.ஏ.,  உடன் இருந்தார்.   கழகப் பொதுச் செயலாளர் தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, சுயேட்சை மற்றும் காங்கிரஸ், பா.ம.க., தேமுதிக ஆகிய கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்து, அவர்களுக்கான கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கினார்கள். கருணை உள்ளத்தோடு தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, கழகப் பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை, கழகத்தில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago