முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா டெஸ்ட்: இந்திய அணி 631 ரன் குவிப்பு

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, நவ. 16 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெ ற்று வரும் 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முத ல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 631 ரன்னைக் குவித்து ஆட்டத் தை டெக்ளேர் செய்தது.  இந்தப் போட்டியில் டிராவிட், லக்ஷ்மண் மற்றும்தோனி ஆகியோர் சதம் அடித்ததால் இந்திய அணி பிரமாண்டமான ஸ்கோரான 600 ரன் னைத் தாண்டியது. தவிர, துவக்க வீரர் காம்பீர் அரை சதம் அடித்தார். 

இந்திய அணி இந்த 2 -வது டெஸ்டில் 600 ரன்னைத் தாண்டி பிரமாண் டமான ஸ்கோரை எட்டியதால், இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் வெ ற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதே போல பெளலர்களும் சிறப்பாக பந்து வீச வேண்டும். 

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சை 3-வது நாள் வரை ஆடியுள்ளது. இந்திய அணி இறுதியில், 151.2 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 631 ரன்னைக் குவித்து இருக்கிறது. 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான வி.வி.எஸ். லக்ஷ்மண் அதிகபட்சமாக 280 பந்தை சந்தித்து 176 ரன்னை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்கா மல் இருந்தார். 391 நிமிடம் களத்தில் இருந்த அவர் மொத்தம் 12 பவு ண்டரி அடித்தார். 

கேப்டன் தோனி 175 பந்தில் 144 ரன்னை எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 10 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர், ரோச் வீசிய பந்தில் கீப்பர் பாக். கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

முன்னதாக டிராவிட் 207 பந்தில் 119 ரன்னை எடுத்தார். இதில் 9 பவு ண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் பிராத் வெயிட் வீசி ய பந்தில் கிளீன் போல்டானார். தவிர, காம்பீர் 103 பந்தில் 65 ரன்னையும், சேவாக் மற்றும் டெண்டுல்கர் ஆகியோர் தலா 38 ரன்னையும் எடுத்தனர். 

முன்னதாக சேவாக் மற்றும் காம்பீர் ஜோடி இணைந்து முதல் விக்கெ ட்டிற்கு 66 ரன்னைச் சேர்த்தது. பின்பு 2-வது விக்கெட்டிற்கு காம்பீர் மற்றும் டிராவிட் இணைந்து 83 ரன்னைச் சேர்த்தனர். டெண்டுல்கர் மற்றும் டிராவிட் ஜோடி இணைந்து 3 -வது விக்கெட்டிற்கு 56 ரன் எடு த்தனர். 

டிராவிட் மற்றும் லக்ஷ்மண் ஜோடி இணைந்து 4-வது விக்கெட்டிற்கு 150 ரன் எடுத்தது. லக்ஷ்மண் மற்றும் யுவராஜ் சிங் ஜோடி இணைந்து 6-வது விக்கெட்டிற்கு 40 ரன்னை சேர்த்தது. பின்பு தோனி மற்றும் லக்ஷ் மண் ஜோடி சேர்ந்து 7 -வது விக்கெட்டிற்கு 334 ரன்னைச் சேர்த்தது. 

மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில், கேமர் ரோச் 106 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். கேப்டன் சம்மி 132 ரன்னைக் கொடுத் து 2 விக்கெட் எடுத்தார். தவிர, எப். எட்வர்ட்ஸ் , பிஷூ மற்றும் பிரா த் வெயிட் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

3-வது நாளான நேற்று ஆட்டத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்த இந்திய அணி மதிய நேனீர் இடைவெளிக்குப் பிறகு ஆட்டத்தை டெக்ளெர் செய்தது. அதன் பிறகு மே.இ.தீவு அணி களம் இறங்கியது. 

அந்த அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில், 12 ஓவரில் 2 விக்கெட் இழப்பற்கு 34 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது கே. எட்வர்ட்ஸ் 12 ரன்னுடனும், டி. பிராவோ 4 ரன்னுட னும் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் மற்று ம் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். கடைசியில் மோ சமான வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்