முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது விநியோக திட்ட கிடங்கில் அமைச்சர் ஆய்வு

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.16 - தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி நேற்று உணவுத்துறை அமைச்சர் சென்னை கோபாலபுரத்திலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளையும் மற்றும் அமுதம் பல்பொருள் அங்காடியையும் திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அரவை முகவர்களிடமிருந்து பெற்ற அரிசி மூட்டைகளை அரிசியின் தரம், மற்றும் அளவு ஆகியவைகளை நேரில் ஆய்வு செய்தார்.  அதில் ஈரப்பதம், மற்றும் குருனை ஆகியவைகள் நிர்ணயிக்கப்பட்ட சதவீகிதத்திற்குள் இருக்கிறதா என ஆய்வு செய்தார்.  பொது விநியோகத்திட்டத்திற்கான லாரிகளில் ஏற்றப்பட்ட அரிசி மூட்டைகளை மறுபடியும் இறக்கி எடை மற்றும் தரம் ஆகியவற்றை சோதனை செய்தார்.  இதே போன்று பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்படும் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கோதுமை பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகிய பொருள்களின் அளவு, தரம் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு அனைத்து கிடங்குகளுக்குள்ளும் பொருள்கள் பொட்டலம்மிடும் பணியையும் இயந்திரங்களையும் பார்வையிட்டார். பொருள்கள் இருப்பு பதிவேடு மற்றும் அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.  அதோடு கிடங்குகளின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க ஆணையிட்டார்.  பணியாளர்கள் மற்றும் சுமைதூக்குபவர்கள் ஆகியோரின் குறைகளை கேட்டறிந்தார்.   அனைத்து பணியாளர்களும் பொது விநியோகத்திட்டத்தில் பொது மக்களின் நன்மதிப்பினை பெறும் வகையில் சிறப்பாக கடமையாற்ற அறிவுரை வழங்கினர். ஆய்வின் போது தீனதயாளன் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக தெற்கு மண்டல மேலாளர் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர் மனோகரன், ரகுநாதன் மேலாளர் தரக்கட்டுப்பாடு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்