முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பிறந்த நாள்: 64 ஜோடிக்கு இலவச திருமணம்

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.17 - முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 64 கோடிகளுக்கு இலவச திருமணம் மற்றும் 64 நிழற்குடைகள் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் மேலான ஆணைக்கிணங்க, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு டி.ஆர். அன்பழகன் ஜெயலலிதா பேரவை செயலாளர் தலைமை தாங்கினார். நம்பிராஜ் (எ) எம்.ஜி.ஆர். நம்பி பேரவை துணைச் செயலாளர் முன்னிலை வகித்தார்.  உயர்கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன் தருமபுரி மாவட்ட பேரவை செயலாளர் வரவேற்றார். 

கூட்டத்தில் சி. பொன்னையன் அமைப்புச் செயலாளர், ஓ. பன்னீர்செல்வம்

நிதித் துறை அமைச்சர், கே.ஏ. செங்கோட்டையன்  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்,  அ. தமிழ்மகன் உசேன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், டாக்டர்  விசாலாட்சி நெடுஞ்செழியன் அமைப்புச் செயலாளர்,

ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத்  அமைப்புச் செயலாளர், டாக்டர் மு. தம்பிதுரை, எம்.பி., பொள்ளாச்சி வ. ஜெயராமன், எம்.எல்.ஏ., 

என். தளவாய் சுந்தரம், பா. வளர்மதி, எம்.எல்.ஏ., ஆதிராஜாராம்

எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர், எஸ். கோகுல இந்திரா 

மகளிர் அணிச் செயலாளர்,  சுற்றுலாத் துறை அமைச்சர்  அ. அன்வர்ராஜா 

சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் எஸ். ஜெனிபர் சந்திரன், 

மீனவர் பிரிவு இணைச் செயலாளர் ஆர். கமலகண்ணன்,  அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் வி. செந்தில்நாதன், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்   ஜெ. சீனிவாசன், எம்.சி.,  

திருச்சி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தீர்மானத்தை படித்தார்.ரவிக்குமார் தென் சென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவை  செயலாளர் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் லட்சியங்களை இதயத்திலும் கொண்டு இயங்குகிற ஒப்பற்ற பேரியக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், கழகத்தின் கண்மணிகளான கோடானு கோடி தொண்டர்களையும் கண்ணெனக் கட்டிக் காத்து, சூழவரும் பகையை சுக்குநூறாக்கி, கழகத்தை கோட்டையில் கொலுவீற்றிட வைத்து, மூன்றாம் முறையாய் தமிழகத்தின் முதலமைச்சராக மக்களின் பேராதரவோடு அமர்ந்து, அரிய மக்கள் பணியாற்றி வரும் ஜெயலலிதாவை, பேரவை சார்பாக வாழ்த்தி வணங்குகிறோம். 

எதிலும் வெற்றி, எங்கும் வெற்றி, எப்போதும் வெற்றி என்ற உன்னத நிலையை, என்றென்றும் சாதனை படைக்கும் ஜெயலலிதாவின் அயராத உழைப்பினால் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த ஜெயலலிதாவுக்கு, பேரவையின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. 

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட கழக வேட்பாளர்கள் ஜெயலலிதாவின் உழைப்பால் மகத்தான வெற்றி பெற்றதுடன், 10 மாநகராட்சிகளையும், அனைத்து மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்களையும் மற்றும் பெரும்பான்மையான உள்ளாட்சி அமைப்புகளிலும் அமோக வெற்றி பெற்று கழகம் கைப்பற்றியது, ஜெயலலிதாவின் மதி நுட்பத்திற்கும், தமிழக மக்களுக்கு ஈகை தன்மையுடன் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நல் வாழ்வு திட்டங்களும், அதனால் வாழ்வில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் கொண்ட தமிழக மக்கள் ஜெயலலிதாவின் நல்லாட்சி, உள்ளாட்சியிலும் மலர்ந்திட மக்கள் வழங்கிய நற்சான்றாகும். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கழகத்திற்கு மகத்தான வெற்றியை பெற்றுத் தந்த ஜெயலலிதாவுக்கு இக்கூட்டம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. 

நடந்து முடிந்த கழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் சிறப்பான வியூகம் அமைத்து, தானே எல்லாம், தனக்கே எல்லாம் என்ற மமதை கொண்ட கருணாநிதியின் ஆணவத்தை அடக்கி, தமிழகத்தை மீட்டெடுக்க, கழகம் மிகப் பெரிய வெற்றியினை பெற்றிட வழிவகுத்திட்ட ஜெயலலிதா, உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கழகம் தமிழகத்தின் தனிப்பெரும் சக்தி என்பதை நிலை நாட்டிட தனித்துப் போட்டியிட்டு மிகப் பெரிய வெற்றியினைப் பெற்றது. ஜெயலலிதாவால் தான் இந்திய நாட்டினை வழிநடத்த முடியும் என்று நாட்டு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். 

எனவே இந்திய நாட்டினையும் நல்வழியில் நடத்திட ஜெயலலிதாவின் மதிநுட்பத்தால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும், கழகம் மிகப் பெரிய வெற்றியினை பெற்றிட  ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி ஜெயலலதா பேரவை செயல்படுவது எங்களின் தலையாய கடமை என்பதை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.  

தமிழக மக்களின் நல்வாழ்விற்காகவும், வளர்ச்சிப் பாதையில் தமிழகம் முதன்மை மாநிலமாகவும், நாளும் பொழுதும் அயராது உழைத்த நம்மையெல்லாம் கட்டிக்காத்து வழி நடத்திச் செல்லும் ஜெயலலிதாவின் 64-வது பிறந்த தினம் வருகிற பிப்ரவரி 24​ல் வரவுள்ளது. அந்த நன்னாளை மக்களின் மகிழ்ச்சி தினமாக கொண்டாடவும், 64 ஜோடிகளுக்கு இலவச திருமணமும், தமிழக மக்களுக்கு என்றும் குடை போல் நிழல் கொடுத்து காத்து வரும் ஜெயலலிதாவின் திருப்பெயரால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 64 நிழற் குடைகள் ஜெயலலிதாவின் சாதனைகளை பறைசாற்றும் விதமாக அமைப்பது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை, எந்தவொரு மாநில அரசும் கொண்டு வராத துறையான 'சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை' என்னும் புதிய துறைக்கு கால்கோளிட்ட ஜெயலலிதாவுக்கு உளமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதுடன், விலையில்லா அரிசி தந்து, வறுமை என்னும் வார்த்தையை தமிழகத்தின் எல்லையிலிருந்தே அப்புறப்படுத்தியும், இருள்சூழ்ந்த தமிழகத்திற்கு ஒளி புகட்டியும், மாணவச் செல்வங்களுக்கு மடிக் கணினி, பாடப் புத்தகங்கள், வரலாற்றுப் புவியியல் வரைபடங்கள், கணித உபகரணங்கள், தூரம் கடக்க மிதிவண்டி, ஏற்றத்தாழ்வு போக்கிட இலவச சீருடைகள், இவற்றோடு புத்தகச் சுமை குறைக்க பருவ முறை பாடத் திட்டங்கள், கல்வி ஊக்கத் தொகை, மதிப்பெண் அடிப்படையிலான அளவீட்டு முறையை மாற்றித் தர அளவுகோல் கொண்டுவந்து, புதுமை புகுத்துதல் என கல்வியில் புரட்சி; தாலிக்குத் தங்கம்; திருமண உதவித்தொகை இரட்டிப்பு; படித்த பட்டதாரி பெண்களுக்க ஊக்கத் தொகையாக ரூ. 50,000, இல்லத்தரசிகளின் வேலை பளு குறைக்க மிக்சி, கிரைண்டர், மின்விசிறி; மழைக்காலத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க இயலாத நிலையில் உள்ளதால் அவர்களுக்கு நிவாரணமாக ஒரு குடும்பத்திற்கு ரூபாய். 4,000 வழங்கியது; முதியோர் ஆதரவற்றோர்​ஊனமுற்றோர்க்கு உதவித் தொகையை ஐநூறிலிருந்து ஆயிரமாக உயர்த்தியது; அரசு ஊழியர் மகப்பேறு விடுப்பை ஆறு மாத காலம் என nullட்டித்த கருணை, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாராத்தை மீட்டெடுக்கும் பொருட்டு கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம், ஒட்டு மொத்த குடும்பத்திற்கே பயனளிக்கும் விதத்தில் ஆய்வு செய்து விரிவாக்கப்பட்டிருக்கும் சிறப்பு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்,

எந்தவிதமான கட்டிடக் கலை அம்சங்களும் இல்லாமல், வீணாக்கப்பட்ட தண்ணீர்த்தொட்டி போன்று கருணாநிதியால் வடிவமைக்கப்பட்ட தலைமைச் செயலகத்தை, தமிழக மக்களுக்கு நலம் தரும் வகையில், தலைநகர் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகரான பல்நோக்கு சிறப்பு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்ற ஏற்றிருக்கும் உறுதி மற்றும் எண்ணற்ற நலத் திட்டங்களை இந்த ஐந்து மாத கழக ஆட்சியில் பட்டியலிட முடியாத அளவுக்கு ஏழை​எளியோர்க்கு பயன் தரும் திட்டங்களை கருணை உள்ளத்தோடு அள்ளித் தந்திருக்கும் நம் காவியத் தாயை,  முதலமைச்சர் ஜெயலலிதாவை, இப் பேரவை வாழ்த்தியும், வணங்கியும் மகிழ்கிறது.   

நெஞ்சிற் பெரு உரமும், நேர்மைக்கே எந்நாளும் அஞ்சாது வாழ்வதுவே ஆளுமைக்கு அறிகுறியாம் என்னும் நேர்மைத் திடத்தோடும், நெறிபிறழா மனதோடும் நல்லாட்சி நடத்தி வரும் நம் முதலமைச்சர் ஜெயலலிதா, ஈழத்தில் நடைபெற்ற இரக்கமற்ற இனப் படுகொலைகளுக்குக் காரணமான இரத்த வெறி பிடித்த ராஜபக்சே அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை, பொருளாதாரத் தடையும் வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் வீரமிக்க தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றியதோடு, அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் தீர்மானத்தை வலியுறுத்தி, இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்ததற்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பெயரிலான இப் பேரவை நெஞ்சார்ந்த நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது. 

தீய சக்தி கருணாநிதியின் அதிகாரத்தைக் கொண்டு, அப்பாவி மக்களை மிரட்டி, மதுரையை ஆட்டுவித்த அழகிரி கும்பலிடமிருந்து மதுரையையும், கருணாநிதியின் குடும்பக் குட்டிச்சாத்தான்களால் கபளீகரம் செய்யப்பட்ட கலைத் துறையையும் மீட்டெடுத்ததோடு, கடந்த பல வருடங்களாக ஏகபோகம் காட்டி, எதேச்சதிகாரம் நடத்தி வந்த ஒரு பித்தலாட்டக் கும்பலிடமிருந்து சின்னத்திரை மற்றும் ஊடகத் துறையையும் அரசு கேபிள் டி.வி. மூலம் மீட்டு, ஏழை​எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சானல்களை கண்டுகளிக்கவும், இதுவரை அச்சுறுத்தி அடக்கப்பட்டு வந்த கேபிள் ஆப்பரேட்டர்கள் சுதந்திரமாய் தங்கள் தொழிலைத் தொடரவும், அரசு கேபிள் டி.வி. மூலம் வாஞ்சையோடு வழிவகை செய்து தந்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவை இக் கூட்டம் நெஞ்சார வாழ்த்தி வணங்குகிறது. 

கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேருழைப்பாலும், மதிநுட்பத்தாலும், அதிகாலைத் தொடங்கி பின்னிரவும் கடந்து ஆற்றுகிற கண்துஞ்சா கடமைகளாலும், இந்தியாவிலேயே தலைசிறந்த முதன்மை மாநிலமாக தமிழகம் உருவாகி வருகின்ற நற்செய்திகளை, நம் கழக அரசின் சீரிய பணிகளை துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டி, விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலம் அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழுக்கு மேலும் அணி சேர்க்க இப் பேரவை உளப்nullர்வமாய் உழைத்திட உறுதிமொழி எடுக்கிறது.   

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்