முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புளியந்தோப்பு பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.17 - வழிப்பறி, கற்பழிப்பு, கொலைமிரட்டலில் ஈடுபட்ட பிரபல ரவுடி கருக்கா சுரேஷ் என்பவன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இது பற்றி விபரம் வருமாறு:- கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ஷரீபா என்பவர் கொடுத்த புகாரில் 376 மற்றும் 50 (2) இ.த.ச. (கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் வழக்கு ) பதியப்பட்டு குற்றவாளி கருக்கா சுரேஷ் என்பவரை புளியந்தோப்பு போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் மேற்படி குற்றவாளி கருக்கா சுரேஷ் என்பவர் புளியந்தோப்பு பகுதியில் கூட்டுக் கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, திருட்டு மற்றும் கொலை முயற்சி போன்ற குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், ஏற்கனவே கற்பழிப்பு வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் என்பதும், புளியந்தோப்பு காவல் நிலைய வரலாற்று பதிவேட்டு ரவுடி என்பதும் தெரியவந்தது.
எனவே தலைமறைவாகயிருந்து வந்த பிரபல ரவுடி சுரேஷ் என்ற கருக்கா சுரேஷ் என்பவரை கைது செய்ய மாநகர் ஆணையாளர் திரிபாதி, ஆணையிட்டார். கூடுதல் ஆணையாளர் தாமரை கண்ணன், அறிவுரைப்படி புளியந்தோப்பு காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் புளியந்தோப்பு சரக காவல் துணை ஆணையாளர் லோகநாதன் மேற்பார்வையில் புளியந்தோப்பு மாவட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரமை செய்யப்பட்டது. சுரேஷ் என்ற கருக்கா சுரேஷ் என்பவரை தனிப்படையினர் அக்.21-ந் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
புளியந்தோப்பு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் சார்லஸ் சாம் ராஜதுரை பரிந்துரையின் பேரில் சென்னை மாநகர காவல் ஆணையர் திரிபாதி, உத்தரவின் பேரில் மேற்படி குற்றவாளி நவ.11-ந் தேதி முதல் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார். மேற்படி குற்றவாளியை திறம்பட புலன் விசாரணை செய்து கைது செய்த தனிபடையினரை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony