முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபாநாயகர் தலைமையில் சர்வகட்சி தலைவர்கள் கூட்டம்

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நவ.17 - வருகிற 22 ம் தேதி பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறுவதை முன்னிட்டு சபாநாயகர் மீராகுமார் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார்.  பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வருகிற 22 ம் தேதிமுதல் அடுத்த மாதம் 23 ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லோக்பால் மசோதா உள்ளிட்ட 5 மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல், வெளிநாட்டில் இந்தியர்களின் கறுப்புப்பணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகளை கிளப்ப நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன.
இந்த நிலையில் பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த சபாநாயகர் மீராகுமார் அனைத்து கட்சித் தலைவர்களின் ஆதரவை நாடியுள்ளார். அதற்காக டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் மீராகுமார் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்ய சபை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை அமைதியாக நடத்துவது குறித்து  ஏற்கனவே அருண்ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரை மத்திய நிதி அமைச்சரும், பாராளுமன்ற அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது தெரிந்ததே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago