முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவாக் உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன்: போலாக்

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

டர்பன், நவ. 17 - இந்தியாவின் அதிரடி வீரரான வீரேந்தர் சேவாக் உலகின் அபாயகர மான பேட்ஸ்மேன் என்று தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான கிரேமி போலாக் தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபர ம் வருமாறு -
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் சிறந்த பேட்ஸ்மே ன் கிரேமி போலாக். 47 வயதான இவர் இந்தியாவின் துவக்க வீரரான சேவாக்கை உலகின் அபாயகரமான பேட்ஸமேன் என்று கூறியுள்ளார்.
உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான போலாக் டர்பன் நகரி ல் நிருபர்களைச் சந்தித்த போது, சேவாக் மற்றும் பல்வேறு கிரிக்கெட் விஷயங்கள் குறித்து கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு -
கிரிக்கெட் போட்டிகளின் போது, சேவாக் மிகவும் எளிதாக பந்தை எதிர்கொள்கிறார். அதோடு நேர்த்தியான முறையில் பந்துகளை தேர்ந்தெடுத்து அடித்து ஆடுகிறார். அவரது ஷாட்டுகள் நன்றாக உள்ளது.
தவிர, ஆடும் போது, கால்களை முன்னே கொண்டு செல்வதில் சிறப் பாக இல்லாவிட்டாலும் அவரால் அதிரடியாக ஆட முடிகிறது. அவரால் நிற்கும் இடத்தில் இருந்தே சிறப்பாக விளையாட முடிகிறது.
தற்போதைய கிரிக்கெட் உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன் சே வாக் ஆவார். இவ்வாறு தெ.ஆ.அணியின் முன்னாள் வீரரான கிரேமி போலாக் குறிப்பிட்டு இருக்கிறார்.
தெ.ஆ. அணியின் சிறந்த முன்னாள் பேட்ஸ்மேன்களில் ஒருவரான கிரேமி போலாக் இதுவரை 23 டெஸ்டில் விளையாடி இருக்கிறார். அவரது சராசரி 60.87 ஆகும். அவர் 8 சதங்களையும், 14 அரை சதங்களையும் அடித்து இருக்கிறார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனான விவியன் ரிச்சர்ட்சும் உலகக் கோப்பைக்கு முன்பு அளிதத பேட்டியின் போது, இதே கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஒரு கால கட்டத்தில் கிரிக்கெட்டில் புகழ் பெற்று இருந்த சமயத்தில் அந்த அணியில் இடம் பெற்று இருந்த ரிச்சர்ட்ஸ் ரன் மெஷின் என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்