முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐயப்பன் கோவிலில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள்

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம், நவ.17 - சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலையணிந்து விரதத்தை தொடங்குவர். ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை விரதமிருந்த பிறகு யாத்திரையாக சென்று சபரியில் உள்ள ஐயப்பனை தரிசிப்பார்கள். இந்த ஆண்டிற்கான யாத்திரை சீசன் இன்று தொடங்குகிறது. இன்று கார்த்திகை முதல் நாள் ஆனதால் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதத்தை தொடங்குவார்கள். இவர்கள் செல்லும் யாத்திரையில் விரும்பத் தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேவசம்போர்டு எடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு புல்மேட்டில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பல பக்தர்கள் உயிரிழந்தனர். அது போல் இனியும் நடக்காமல் இருக்க புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வண்டிப்பெரியார் வழியாக வாகனங்கள் செல்ல தடை, ஒரு வழிப்பாதை, இ கியு வசதி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்து தேவஸ்தான கமிஷனர் வாசு கூறியதாவது,
சபரிமலையில் அமைந்திருக்கும் ஐயப்பனை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஓரளவுக்கு மேல் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க முடியாது என்பதால் வருடந்தோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வசதிகளை பெருக்கி தர முடியவில்லை. கடந்த ஆண்டு மகர ஜோதியின் போது புல்மேட்டு பாதையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 102 பக்தர்கள் உயிரிழந்தனர்.
அது போன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் தொடராமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சில பாதைகள் ஒரு வழி பாதையாகவும், சில பாதைகளை தடை செய்தும், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. திரும்பும் போது சஸ்திர நந்தன சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
கூட்ட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மாளிகைபுரம் வளாகத்தில் அதிகளவில் பிரசாத கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. துறை சார்ந்த வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் நான்கு மைல்களுக்கு தொலைவிலேயே நிறுத்தப்படும். இது அடர்ந்த வனப்பகுதி என்பதால் கொடிய விலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும். எனவே காட்டு பாதைகளை தவிர்த்திடுமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக இ கியூ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் நீண்ட நேர வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. சோதனை ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முறை வெற்றியடைந்தால் மகர விளக்கு கொண்டாட்டத்தின் போது இது முழுமையாக அமல்படுத்தப்படும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவுக்கு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago