முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டுக்கு லஞ்சம் வழக்கு: 5 பேருக்கு ஜாமீன்

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.17 - ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.க்கள் இருவர் உட்பட 5 பேருக்கு டெல்லி ஐகோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. கடந்த 2008-ம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது அரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட பாரதிய ஜனதா எம்.பி.க்கள் சிலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அமர்சிங், பா.ஜ.க. முன்னாள் எம்.பி.க்கள் பக்கன்சிங் குலாஸ்தே, மகாவீர்சிங் பகோரா, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி ஆகியோர் உள்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அமர்சிங்கிற்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் வெளிநாட்டிற்குகூட செல்லலாம் என்றும் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில்  அமர்சிங்கைத் தவிர இதர 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது ஐகோர்ட்டு நீதிபதி எம்.எல்.மேத்தா விசாரணை நடத்தினார். பிறகு இவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் ஒவ்வொருவரும் ரூ. 2 லட்சம் சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு வேறு இருவரின் தனிநபர் ஜாமீனிலும் விடுதலை ஆகலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள இவர்கள் 5 பேரும் விசாரணை அதிகாரிகள் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதே வழக்கில் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பா.ஜ.க. எம்.பி. அசோக் அர்கால் என்பவரும் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கும் நீதிபதி மேத்தா முன்ஜாமீன் வழங்கினார். மேலும் விசாரணைக்காக வரச்சொல்லி சம்மன் அனுப்பியுள்ள கீழ்க்கோர்ட்டில் ஆஜராகுமாறு அசோக் அர்காலுக்கு உத்தரவிட்டுள்ளார். எந்தத் தேதியில் ஆஜராகவேண்டும் என்று கீழ்க்கோர்ட்டு சம்மன் அனுப்பியதோ  அதே தேதியில் அந்த கோர்ட்டில் அசோக் அர்கால் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago