முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பு ரூ.1.76 லட்சம் கோடிதான்

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, நவ.17  - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட இழப்பின் அளவு ரூ. 1.76 லட்சம் கோடிதான் என்று தலைமை கணக்கு அதிகாரி வினோத்ராய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட நஷ்டம் அளவு தொடர்பான சி.ஏ.ஜி. அலுவலகத்தின் அறிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. அதில் கூறப்பட்டுள்ள நஷ்ட தொகையை நான் மீண்டும் உறுதிபட தெரிவிக்கிறேன் என்று தலைமை கணக்கு அதிகாரி வினோத்ராய் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் எனக்கோ அல்லது எனது அலுவலகத்திற்கோ எந்தவித நெருக்கடியும் வரவில்லை. யாரும் நெருக்கடி தரவில்லை. ஆனால் சி.ஏ.ஜி. அமைப்பை பலவீனப்படுத்த பல தரப்பிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் அதற்கு நாங்கள் பணிய மாட்டோம். எங்களது கடமையை தொடர்ந்து செய்வோம். இந்த அமைப்பின் பாரம்பரியம் பலவீனமாக நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இத்தனை கடும் முயற்சிகளுக்கு பிறகும் கூட நாங்கள் வலுவாகத்தான் இருக்கிறோம் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்