முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் தேசிய சுகாதார திட்டத்தில் ஊழல்

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

லக்னோ, நவ.17 - உத்தர பிரதேசத்தில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த அலகாபாத் ஐகோர்ட்டு  உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதார  திட்டத்தில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாகவும் இந்த ஊழல் உ.பி. மாநிலம் முழுவதும் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சி.பி. ஐ. விசாரணை நடத்தக்கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு  தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதிகள்  பிரதீப்காந்த், ரீட்டுராஜ் அவஸ்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த ஊழல் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி  4 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையை  உ.பி. மாநிலம் முழுவதும் நடத்த வேண்டும் என்றும்  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த விசாரணையை மேற்கொள்ளும் சி.பி.ஐ.க்கு அனைத்து ஆவணங்களையும் வழங்கி  ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் உ.பி. மாநில அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்